News
நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சதுக்கு இதுதான் காரணம்!.. முதன் முறையாக வாயை திறந்த பப்லு!..
Actor Babloo Sheetal Issue : தமிழில் துணை நடிகர்களாக நடித்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் பப்லு. இவர் அஜித் மாதிரியான பிரபலமான நடிகர்களுக்கு வில்லானாக எல்லாம் ஒரு காலத்தில் நடித்து வந்தார். அதன் பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தது.
இருந்தாலும் சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பிறகு விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். அந்த சமயத்தில் அந்த நிகழ்ச்சிக்கு சிம்பு நடுவராக இருந்தார். சிம்புவிற்கும் பப்லுவிற்கும் அப்போது சண்டை ஏற்பட்டது.
அதன் பிறகு பப்லு குறித்து பெரிதாக எதுவும் தகவல் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பப்லுவின் காதல் கதை பிரபலமானது. சீதல் என்னும் இளம்பெண்ணை அவர் காதலித்து வருவதாக கூறப்பட்டது. அவர்களும் ஜோடியாக நிறைய பேட்டிகள் கொடுத்தனர்.

இந்த நிலையில் தற்சமயம் சீதல் பப்லுவை விட்டு பிரிந்துவிட்டார். இதுக்குறித்து பப்லு பேசும்போது அவள் அவருக்கு நிறைய நேரத்தை நான் செலவிட வேண்டும் என நினைக்கிறார். ஆனால் எனக்கு நிறைய பணிச்சுமை இருக்கிறது. அவரது பிறந்தநாள் அன்று மட்டும் 11 லட்சம் செலவு செய்தேன்.
அதேசமயம் அன்றைய தினம் என்னை மிஸ்கின் திரைப்படத்தில் நடிப்பது குறித்து பேசுவதற்காக என்னை அழைத்தார்கள். இப்படியான நேரங்களில் நான் எப்படி அவருடன் இருக்க முடியும். இதுவே எங்கள் பிரிவிற்கு முக்கிய காரணமானது என கூறுகிறார் பப்லு.
