என்னை மன்னித்துவிடுங்கள் அந்த டிவிட்டை நீக்கிவிட்டேன்? –  பதிலளித்த மனோபாலா!

வாரிசு திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படம் தளபதொ 67. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கெளதம் மேனன் போன்ற முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

Social Media Bar

படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளில் மும்மரமாக இறங்கியுள்ளார் லோகேஷ். ஆனால் படக்குழுவிடம் இருந்து இந்த திரைப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இன்னும் வரவில்லை.

இந்த நிலையில் இன்று மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தை குறித்த அப்டேட்டை வெளியிட்டிருந்தார். அதாவது தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது என அவர் கூறியிருந்தார். மேலும் லோகேஷ் கனகராஜை நேரில் சென்று சந்தித்தாகவும் தெரிவித்திருந்தார்.

இதனால் இந்த ட்வீட் ரசிகர்களிடையே மிகவும் ட்ரெண்ட் ஆனது. ஆனால் சில மணி நேரங்களில் அந்த டிவிட்டை மனோபாலா நீக்கிவிட்டார். நான் அந்த டிவிட்டை நீக்கிவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் உண்மையிலேயே இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டதா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.