அன்னிக்கு நாகேஷ் காட்டுன சோக்குதான் என்னை சினிமாவுக்கு கொண்டு வந்துச்சு!.. சின்ன வயதில் பார்த்திபனுக்கு நடந்த நிகழ்வு!.

Actor Nagesh: தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பார்த்திபன். பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பார்த்திபன் அதன்பிறகு தனியாக திரைப்படம் எடுக்கத் தொடங்கினார்.

திரைப்படம் இயக்க துவங்கிய பிறகு கமல்ஹாசனை போலவே பார்த்திபனும் தமிழ் சினிமாவில் மாற்று சினிமாக்களை கொண்டு வர வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார். எனவே அவர் கமர்சியல் திரைப்படங்களை இயக்கினாலும் கூட அதற்கு நடுவே உலகத்தரம் வாய்ந்த சில திரைப்படங்களையும் இயக்க துவங்கினார்.

Social Media Bar

அந்த திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்றாலும் அடுத்து வரும் தலைமுறைகள் இந்த திரைப்படத்தை கொண்டாடும் என்பது பார்த்திபனின் எண்ணமாக இருந்தது. பார்த்திபன் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு அவருக்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது அவருக்கு சிறுவயதில் நடந்த நிகழ்வுதான் என்று ஒரு பேட்டியில் கூடி இருக்கிறார்.

அவர் மூன்றாவது படிக்கும் சமயத்தில் நாகேஷ் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பிற்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது அங்கு அவர் நாகேஷை பார்த்தபோது நாகேஷ் நடித்து முடித்துவிட்டு வந்து அமர்ந்ததுமே அவருக்கு சேவைகள் செய்வதற்கு என்று மூன்று நபர்கள் இருந்தனர்.

அவர்கள் பழச்சாறு கொண்டு வந்து கொடுப்பது விசிறி விடுவது என்று நாகேசுக்கு வேண்டிய அனைத்து விஷயங்களையும் செய்து கொடுத்தனர். அதை எட்டி இருந்து பார்த்த பார்த்திபன் சினிமாவிற்கு சென்றால் இவ்வளவு சொகுசு வாழ்க்கை கிடைக்குமா என யோசித்து அப்பொழுது சினிமாவிற்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்துவிட்டார். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.