Connect with us

நான் கோர்ட்டுக்கு போக காரணமா இருந்தவர் நடிகர் கமல்ஹாசன்! – பிரகாஷ்ராஜ் வாழ்க்கையில் கமலால் நடந்த சம்பவம்!

News

நான் கோர்ட்டுக்கு போக காரணமா இருந்தவர் நடிகர் கமல்ஹாசன்! – பிரகாஷ்ராஜ் வாழ்க்கையில் கமலால் நடந்த சம்பவம்!

Social Media Bar

தமிழ் சினிமாவில் டாப் டென் வில்லன்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு கண்டிப்பாக ஒரு முக்கியமான இடம் இருக்கும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பெரும் பெரும் நட்சத்திரங்களுக்கெல்லாம் வில்லனாக நடித்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் பிரகாஷ்ராஜ் மிகவும் நல்ல மனிதர். இருந்தாலும் அவரது கல்லூரி காலங்களில் ஒரு முறை அவர் நீதிமன்றத்திற்கு செல்லக்கூடிய சூழல் ஒன்று ஏற்பட்டது. அப்படியான சூழல் ஏற்பட்டதற்கு முக்கியமான காரணம் நடிகர் கமலஹாசன் எனக்கு கூறுகிறார் பிரகாஷ்ராஜ்.

கல்லூரி காலங்களில் பிரகாஷ்ராஜ் கமலஹாசனுக்கு மிகப்பெரும் ரசிகராக இருந்தார். 1983 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் சலங்கை ஒலி என்ற திரைப்படம் வெளியானது. அதே படம் தெலுங்கில் சகர சங்கமம் என்கிற பெயரில் வெளியானது.

அந்தத் திரைப்படத்தின் வரும் இடைவெளி காட்சியானது பிரகாஷ்ராஜுக்கு மிகவும் பிடித்த ஒரு காட்சி ஆகும். எனவே கல்லூரி காலங்களில் பலமுறை சலங்கை ஒலி திரைப்படத்தைக் காண தொடர்ந்து திரை அரங்கிற்கு சென்று வந்துள்ளார்.

இப்படி ஒரு முறை திரையரங்கிற்கு படத்திற்கு தாமதம் ஆகிவிடும் என வேகமாக செல்லும்போது விதிமுறையை மீறி சாலையை கடந்துள்ளார். இதனால் பிரகாஷ்ராஜ் உடன் சேர்ந்து கிட்டத்தட்ட 300 மாணவர்களை போலீசார் பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

இந்த நிகழ்வானது தன் வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத நிகழ்வு என நினைவு கூறுகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

To Top