Tamil Cinema News
மாடர்ன் உடை போட்டதால் வந்த வினை.. தவறாக நடந்துக்கொண்ட ஹவுஸ் ஓனர்… உண்மையை கூறிய ஆண்ட்ரியா..!
தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி இப்பொழுது நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவை பொறுத்த வரையில் சினிமாவிற்கு வந்த போது நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதுதான் அவரது பெரிய ஆசையாக இருந்தது.
ஆனாலும் அவருக்கு பாடுவதில் திறமை அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பாடல்களை பாடிவந்தார். பச்சைக்கிளி முத்துச்சரம் நடித்ததில் அவர் நல்ல வரவேற்பை பெற்றார். முதன்முதலாக அன்னியன் திரைப்படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலை பாடியிருந்தார் ஆண்ட்ரியா.
அதற்கு பிறகு அவருக்கு நிறைய பாடல்களை பாடுவதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு மிக தாமதமாகதான் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆண்ட்ரியாவிற்கு நடந்த நிகழ்வு:
மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தோழியாக நடித்திருந்தார் ஆண்ட்ரியா. இந்த நிலையில் அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வு குறித்து ஆண்ட்ரியா ஒரு பேட்டியில் பேசியிருந்தார். பொதுவாகவே ஆண்ட்ரியா மாடர்ன் உடை அணியக்கூடியவர் ஆவார்.
அவர் ஒரு வீடு வாங்குவதற்காக வீட்டு ஓனரிடம் பேசுவதற்கு சென்றிருக்கிறார். அப்பொழுது மாடன் உடை அணிந்து கொண்டு அங்கு சென்று இருக்கிறார். இதனால் வீட்டு ஓனருக்கும் ஆண்ட்ரியாவிற்கும் இடையே சண்டை வந்துள்ளது. பிறகு அங்கு இருந்த வீட்டு புரோக்கர் பேசும் பொழுது மேடம் நீங்கள் மாடர்ன் உடைய அணியாமல் சல்வார் அணிந்து வந்திருந்தால் வீடு கிடைத்திருக்கும் என்று கூறியிருக்கிறார். இந்த விஷயத்தை ஆண்ட்ரியா அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.