Tamil Cinema News
என்ன பத்தி தப்பா சொல்றீங்க.. உண்மையை சொன்ன நடிகை நளினி.!
தமிழ் சினிமாவில் அறிமுகமானதுமே அதிக வரவேற்பு பெற்ற ஒரு சில நடிகைகளில் நடிகை நளினி முக்கியமானவர். நடிகை நளினி தமிழ் சினிமாவிற்கு வந்தபோது அவருக்கு அப்பொழுது பிரபலமாக இருந்த நிறைய பெரும் நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
நளினி அதற்கு தகுந்தார் போல மிக அழகாக இருந்தார். ஆனால் அவரது திருமணத்திற்கு பிறகு நளினிக்கு சினிமாவின் மீது ஆசை இருக்கவில்லை. ஏனெனில் உடல் எடையை கட்டுகோப்பாக வைத்திருப்பதற்காக தொடர்ந்து குறைவான அளவில் மட்டுமே உணவுகளை எடுத்து வந்தார் நளினி.
திருமணத்திற்கு பிறகு இஷ்டம் போல வாழ வேண்டும் என்று நினைத்தார் எனவே சினிமா துறையில் இருந்து நளினி விலகினார். சினிமா துறையில் இருந்த பொழுது அவர் செய்த சாதனைகள் இப்பொழுது இருக்கும் நடிகைகளால் கூட செய்ய முடியாதவை.
நளினி சொன்ன விஷயம்:
இது குறித்து ஒரு பேட்டியில் அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பேட்டியில் அவரிடம் கேள்வி கேட்கும் தொகுப்பாளர் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 19 திரைப்படங்கள் வரை நடித்திருக்கிறீர்கள். எப்படி உங்களுக்கு அது சாத்தியப்பட்டது என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த நிலையில் நீங்கள் அதை தவறாக கூறுகிறீர்கள் உண்மையில் ஒரு வருடத்தில் தமிழில் மட்டும்தான் 23 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் என்று அதைத் திருத்தினார். மேலும் அவர் கூறும் பொழுது அப்பொழுது எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது.
அதனால் ஒரு நாளைக்கு ஒரு திரைப்படத்திற்கு மூன்றில் இருந்து நான்கு மணி நேரம்தான் கால் சீட் கொடுப்பேன். அதற்குள் எனக்கான காட்சிகளை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலை இருந்தது என்று கூறியிருக்கிறார் நளினி.