Connect with us

குத்து ரம்யாவை சாகடித்த வதந்தி!.. அரண்டு போன திரையுலகம்..

News

குத்து ரம்யாவை சாகடித்த வதந்தி!.. அரண்டு போன திரையுலகம்..

Social Media Bar

தமிழ் சினிமாவில் எது உண்மை.. எது புரளி என அறிவது கடினமான விஷயமாக உள்ளது. சில சமயங்களில் புரளிகளே உண்மை போல பரவி பெரிய பெரிய நியூஸ் சேனல்கள் கூட அந்த செய்தியை போட்டுவிடுகின்றனர்.

இப்படிதான் நடிகர் சரத்பாபு சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக செய்தி வந்தது. ஆனால் அப்போதுதான் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருந்தார். ஆனால் அதற்குள்ளாகவே இப்படி பொய் தகவல் பரவி அதை பிரபலமான சில மீடியா தளங்களே பதிவிட்டன.

இதே போல நேற்று ஒரு சம்பவம் நடந்தது. தமிழில் குத்து, பொல்லாதவன் போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை ரம்யா திடீர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என செய்திகள் பரவின. பல நம்பகமான செய்தி தளங்கள் அந்த செய்தியை பகிர்ந்ததால் பலரும் அதை உண்மை என்றே நம்பிவிட்டனர்.

ஆனால் அவர் உயிரோடுதான் இருக்கிறார். ஜெனிவாவில் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார் ரம்யா… அது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்பது பின்னர்தான் தெரிந்தது. பொதுவாக சினிமா செய்திகளில் நடிகர் அடுத்து நடிக்கும் படம் போன்ற தகவல்களைதான் யூகத்தின் அடிப்படையில் கூறுவார்கள். ஆனால் உயிரோடு இருக்கும் ஒருவரை இறந்துவிட்டார் என கூறுவதெல்லாம் சமீப காலங்களில்தான் அதிகமாக நடக்கிறது.

To Top