Cinema History
ஸ்ரீ தேவி காதல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு அந்த மாதிரி நினைச்சுக்குவாராம்!.. அட கொடுமையே…
தமிழ் சினிமாவில் சிறு வயது முதலே நடித்து வருபவர் நடிகை ஸ்ரீ தேவி மூன்று முடிச்சு திரைப்படம் மூலமாக முதன்முதலாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பிறகு 16 வயதினிலே சிகப்பு ரோஜாக்கள் வறுமையின் நிறம் சிகப்பு என வரிசையாக பட வாய்ப்புகளை பெற்றார் நடிகை ஸ்ரீ தேவி. அவருக்கு இருந்த வரவேற்புகளின் காரணமாக தொடர்ந்து கமல்,ரஜினி போன்ற முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை ஸ்ரீ தேவி.
ஸ்ரீ தேவி திரை வாழ்க்கை:
ஸ்ரீதேவியை பொருத்தவரை காதல் காட்சிகளில் சிறப்பாக நடிக்க கூடியவர் என்று தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வருபவர் ஆவார். இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி காதல் காட்சிகளில் சிறப்பாக நடிப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது.

என்னதான் தமிழ் சினிமாவில் ஸ்ரீதேவி தொடர்ந்து நடித்தாலும் பாலிவுட் சினிமா மீதுதான் அவருக்கு எப்போதுமே ஈர்ப்பு இருந்து வந்துள்ளது. ஸ்ரீதேவி நடித்த சமகாலகட்டத்தில் பாலிவுட்டில் நிறைய காதல் திரைப்படங்கள் வந்திருந்தன.
காதல் காட்சி ரகசியம்:
அந்த காதல் திரைப்படங்களில் நடித்த கதாநாயகர்கள் மீது ஸ்ரீதேவிக்கு ஈர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழில் ஒவ்வொரு திரைப்படத்திலும் காதல் காட்சிகளில் நடிக்கும் போது அவர் பாலிவுட்டில் இருக்கும் நடிகர்களை நினைத்துக் கொண்டுதான் நடிப்பாராம்.

இதனால் தான் அவரது காதல் காட்சிகள் தமிழ் சினிமாவில் சிறப்பாக இருந்ததாக கூறப்படுகிறது ஸ்ரீதேவி சிறப்பான காதல் காட்சிகளில் நடித்ததாலேயே அப்பொழுது இருந்த இளைஞர்கள் தொடர்ந்து ஸ்ரீதேவியை தங்களது கனவு கன்னியாக நினைத்து வந்தனர். ஆனால் ஸ்ரீதேவியின் வெற்றியின் ரகசியமாக பாலிவுட் கதாநாயகர்களாக இருந்து இருக்கின்றனர்.
