த்ரிஷா செய்த ஆன்லைன் குற்றம்.. வெளி கொண்டு வந்த ஆங்கில பாடகர்.!
தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நடிகை திரிஷா இருந்து வருகிறார். தமிழில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான லேசா லேசா திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை திரிஷா.
அதற்குப் பிறகு திரிஷாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. தொடர்ந்து தமிழில் பெரிய நடிகர்களான விக்ரம் சூர்யா அஜித் விஜய் என்று அனைவருடனும் த்ரிஷா நடித்திருக்கிறார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு திரிஷாவிற்கு தமிழில் வரவேற்புகள் என்பது குறைய துவங்கியது.
இந்த சமயத்தில்தான் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்தார் திரிஷா. அந்த கதாபாத்திரம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
அதனை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார் திரிஷா. இந்த நிலையில் சமீபத்தில் திரிஷாவின் சமூக வலைதள பக்கத்தில் தேவையில்லாத விளம்பரங்கள் சில வெளியானது.
யாரோ தன்னுடைய கணக்கை ஹேக் செய்து விட்டார்கள் என்று இது குறித்து திரிஷா விளக்கமளித்து இருந்தார். இந்த நிலையில் பிரபல பாடகர் ஒருவர் இது குறித்து கூறும் பொழுது நடிகைகள் இதை வேண்டுமென்றே செய்கின்றனர்.
இதற்காக அந்த நிறுவனங்களிடம் நல்ல காசு வாங்கிக்கொண்டு அவர்களுடைய விளம்பரத்தை போடுகின்றனர் பிறகு தன்னுடைய கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாக கூறி விடுகின்றனர் என்று கூறுகிறார்.