Tamil Cinema News
டான்ஸ் ஆட கூப்பிட்டு இடுப்பில் கை வைத்த இளைஞன்.. சினேகாவுக்கு நடந்த நிகழ்வு!
தமிழ் சினிமாவில் அறிமுகமான காலம் முதலே பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை சினேகா. மலையாள தேசத்தை சேர்ந்த சினேகா ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில்தான் நடித்து வந்தார். ஆனால் அவற்றிற்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் இருந்தது.
அதனை தொடர்ந்து தமிழில் வாய்ப்பை பெற்றார். தமிழில் இவருக்கு அதிகமான திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனந்தம் திரைப்படத்தில் நடிக்கும்போது தமிழின் அறிமுக நடிகையாக இருந்தார் சினேகா.
தமிழில் வளர்ந்த நடிகை:
ஆனால் குறைந்த காலத்திலேயே தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக மாறினார். இந்த நிலையில் தற்சமயம் அதிகம் மார்க்கெட் இல்லாத காரணத்தால் சின்னத்திரை நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார் சினேகா.

அந்த வகையில் ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் இவர் நடுவராக பங்கேற்று வருகிறார். ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சி அதிக பிரபலமாகி வருகிறது.
ரியாலிட்டி ஷோவில் நடந்த சம்பவம்:
இந்த நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் அதில் ஆடிய இளைஞர் ஒருவர் சினேகாவுடன் ஆட விருப்பம் தெரிவித்துள்ளார்.

அவருடைய ஆசையை நிறைவேற்றும் பொருட்டு சினேகாவும் அவருடன் ஆடியுள்ளார். இதுதான் டைம் என அந்த இளைஞர் சினேகாவின் இடுப்பை அழுத்தி பிடித்து ஆடியிருப்பது பலருக்கும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் நடிகை ஸ்னேகாவை தனது கைகளில் தூக்கியுள்ளார்.
என்ன இருந்தாலும் ஒரு நடிகையுடன் ஆடும்போது நாகரிகமாக ஆட வேண்டாமா? என இதுக்குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
