News
வடிவேலுவின் தாயார் மறைவு! – இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் வடிவேலு. வடிவேலு இல்லாமல் தமிழ் சினிமாவின் வரலாறை யாராலும் எழுத முடியாது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நடிகர் வடிவேலு.

வடிவேலுவிற்கு அவரது தாய் மீது அதிக பாசம் உண்டு. பல பேட்டிகளில் இந்த விஷயத்தை அவர் தெரிவித்திருக்கிறார். வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பாக்கு 87 வயதாகிறது. முதுமை காரணமாக வெகு நாட்களாக உடல் நல குறைவில் இருந்தார் சரோஜினி.
இந்த நிலையில் நேற்று இரவும் உடல்நிலை மோசமாகி உயிரிழந்துள்ளார் சரோஜினி. இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் அனைவரும் வடிவேலுவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சரான மு.க ஸ்டாலின் அவர்களும் வடிவேலுவின் தாயார் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் வடிவேலுவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
