தனி அறையில்.. குழந்தையாக இருக்கும்போது நடந்த கொடுமை.. வெளிப்படுத்திய சீரியல் நடிகை.!
சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் நடிகை நேஹா கௌடா முக்கியமானவர். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது. கர்நாடாகாவில் இருந்து தமிழில் வாய்ப்பை பெற்றவர்.
தமிழில் கல்யாண பரிசு என்கிற சன் டிவி சீரியலில் நடித்ததன் மூலமாக இவர் பிரபலமடைந்தார். அதற்கு பிறகு இவருக்கு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பாவம் கணேசன் என்னும் தொடரில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அதற்கு பிறகு இன்னமும் பெரிதாக அவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நேஹா கௌடா கூறும்போது தனது வாழ்வில் நடந்த மோசமான நிகழ்வை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது நான் சிறு வயதாக இருக்கும்போது ஒரு நாள் என்னுடைய வீட்டில் பாட்டியை காணவில்லை.
பாட்டியை தேடிக்கொண்டே நான் வெளியில் வந்துவிட்டேன். அப்போது அங்கு நின்ற ஒருவர் எனது அப்பாவை தெரியும் என கூறி ஒரு வாட்ச் கடைக்கு அழைத்து சென்று கதவை சாத்தினார். பிறகு என்னிடம் தவறாக நடந்துகொள்ள பார்த்தார்.
இதனால் நான் பயந்துப்போய் அழ துவங்கினேன். உடனே என்னிடம் கத்தியை காட்டி மிரட்டினார். அவரிடம் இருந்து எப்படியோ நான் தப்பி வந்துவிட்டேன். ஆனால் இப்போதும் அதை நினைத்தால் பதற்றமாகதான் இருக்கிறது என கூறியுள்ளார் நடிகை நேஹா கௌடா.