News
ஒரே புதிரை கண்டுப்பிடிச்சா லைஃப் டைம் செட்டில்மெண்ட் – 8.5 கோடி அறிவித்த தமிழக அரசு.. புதிர் பற்றிய விவரங்கள்..!
சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துக்களை கண்டறிபவர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் மனிதன் நாகரிகம் அடைந்த காலக்கட்டத்தில் பலரும் பயன்படுத்திய மொழி மற்றும் நாகரிகம் ஆகியவை பெரும்பாலும் மண்ணுக்கு அடியில் சென்றுவிட்டன என்றுதான் கூற வேண்டும்.
அப்படி தொன்மையாக இருந்த நாகரிகத்தில் சிந்து சமவெளி நாகரிகமும் முக்கியமானதாகும். 1924 ஆம் ஆண்டு சர் ஜார்ஜ் மார்ஷெல் என்பவர்தான் சிந்து சமவெளி நாகரிகத்தை முதலில் கண்டறிந்தார். இந்த நாகரிகமானது ஆரியர் நாகரிகத்தை விட பழமையானது என கண்டறியப்பட்டது.
அதனை தொடர்ந்து சிந்து சமவெளியில் கண்டுப்பிடிக்கப்பட்ட தொன்மையான பொருட்களும் தமிழ்நாட்டில் கீழடியில் கண்டுப்பிடிக்கப்பட்டவையும் ஒன்று போலவே இருக்கின்றன. எனவே சிந்து சமவெளி நாகரிகள் தமிழர் நாகரிகமாக இருக்கலாம் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.
சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய எழுத்துக்கள் காலத்தால் மிக பழமையானது. அதனால் அதனை தொல்பொருள் ஆய்வாளர்களால் கூட கண்டறிய முடியவில்லை.
இந்த நிலையில் அந்த எழுத்துக்கான அர்த்தத்தை கண்டறிபவர்களுக்கு 8.5 கோடி பரிசை அறிவித்துள்ளது தமிழக அரசு.
