Tech News
300 ரூபாய்க்கு மாதம் அன்லிமிடெட் அதிவேக இண்டர்நெட்.. தமிழ்நாடு அரசின் புதிய திட்டம்..!
தொழில்நுட்ப வளர்ச்சியை பொறுத்தவரை இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்து வருகிறது தமிழ்நாடு. இந்த நிலையில் வெகு வருடங்களாகவே தமிழ்நாடு அரசு மக்களுக்கு குறைந்த விலையில் இணைய வசதியை வழங்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில் அதற்கான வேலைகள் கடந்த 10 வருடங்களாகவே நடந்து வந்தன. ஏனெனில் இப்போதைய நிலையில் இணையம் என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. ஜியோ, ஏர்டெல் மாதிரியான நிறுவனங்கள் எல்லாம் ஓ.டி.டி சப்ஸ்க்ரிப்சனுடன் இணைய வசதியை வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பாரத் நெட் என்னும் நிறுவனத்தோடு சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஃபைபர் கேபிள்களை இழுக்கும் வேலையை செய்து வருகிறது. இந்த நிலையில் முக்கால்வாசி வேலையை தமிழ்நாடு அரசு முடித்துவிட்டது.
500க்கும் அதிகமான கிராமங்களில் ஏற்கனவே ஃபைபர் கேபிள் இழுக்கப்பட்டுள்ளன. கிராம புர மக்கள் பயனடைய வேண்டும் என்பதே இதில் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
எனவே சீக்கிரமே தமிழ்நாடு அரசின் இணைய வசதியானது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
