இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்சமயம் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி.
தலைவன் தலைவி திரைப்படத்தைப் பொறுத்தவரை அது வெளியான சமயத்தில் முதலில் அதிகமாக பேசப்படவில்லை என்றாலும் கூட போக போக படத்திற்கான வரவேற்பு என்பது அதிகரிக்க துவங்கியது.
இப்போது திரையரங்குகளில் தொடர்ந்து அதிக வசூல் செய்து வருகிறது தலைவன் தலைவி திரைப்படம். தொடர்ந்து குடும்ப படமாக எடுத்து வரும் பாண்டிராஜ் மீண்டும் எடுத்திருக்கும் குடும்ப திரைப்படம் தான் தலைவன் தலைவி திரைப்படம்.
இதில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனின் நடிப்பு மிக சிறப்பாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் எவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்தாலும் கூட இந்த கதையை ஆரம்பத்தில் பலரும் நிராகரித்து இருக்கின்றனர்.
குடும்ப திரைப்படங்கள் எல்லாம் இப்போது ஓடாது என்கிற கருத்து பலரது மத்தியில் இருந்து வந்தாலும் கூட தொடர்ந்து குடும்ப படங்களாக எடுத்து ஹிட் கொடுத்து வருகிறார் இயக்குனர் பாண்டிராஜ். அந்த வகையில் தலைவன் தலைவி திரைப்படமும் கூட எதிர்பார்த்த அளவிலான வெற்றியை கொடுத்து வருகிறது.
தற்சமயம் இந்த படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த படம் பல தயாரிப்பாளர்களிடம் சென்று பிறகு கைமாறிதான் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் வசம் வந்துள்ளது.
இதற்கு முன்பு இந்த திரைப்படம் மாஸ்டர் லியோ போன்ற திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் லலித் குமாரிடம் சென்றிருக்கிறது. ஆனால் அந்த படத்தை அவர் எடுக்கவில்லை.
பிறகு சக்தி பிலிம்ஸ் ஃபேக்டரி எங்கிருந்த நிறுவனமும் இந்த படத்தை வேண்டாம் என்று கூறியிருக்கிறது. அதேபோல ஜெயம் ரவியின் முன்னாள் மாமியாரிடமும் இந்த கதை சென்று இருக்கிறது. அப்பொழுது இந்த படத்தில் ஜெயம் ரவி தான் கதாநாயகனாகவும் நடிக்க நடிப்பதாக இருந்தது.
ஆனால் பட்ஜெட் ரீதியாக ஏற்பட்ட குழப்பத்தினால் அவரிடம் இருந்தும் விலகி விட்டார் பாண்டிராஜ். இப்படி பலரிடம் கைமாறிதான் கடைசியாக சத்யஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது.