Connect with us

அந்த ஹாலிவுட் படத்தின் தழுவல்தானா தளபதி 68.. இரட்டை வேடத்தில் வரும் விஜய்!..

vijay willsmith

Hollywood Cinema news

அந்த ஹாலிவுட் படத்தின் தழுவல்தானா தளபதி 68.. இரட்டை வேடத்தில் வரும் விஜய்!..

Social Media Bar

Thalapathy 68: லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 68. இந்த படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கி வருவதால் இது கொஞ்சம் ஜாலியான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டு வரும் டைம் லூப் என்னும் கான்செப்ட்டை கொண்டு தமிழ் மக்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் மாநாடு திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்சமயம் விஜய்யை வைத்து இயக்கும் திரைப்படமும் டைம் ட்ராவல் திரைப்படம்தான் என கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழில் 24 மற்றும் இன்று நேற்று நாளை போன்ற டைம் ட்ராவல் திரைப்படம் வந்துள்ளன.

ஆனால் இந்த படத்தில் சற்று மாறுதலாக வயதான விஜய் கதாபாத்திரம் காலப்பயணம் செய்து இளமையாக இருக்கும் தன்னுடைய கதாபாத்திரத்தையே பார்ப்பதாக கதை அமைந்துள்ளது என கூறப்படுகிறது. இது ஹாலிவுட்டில் வீல்ஸ்மித் நடிப்பில் வந்த ஜெமினி மேன் என்கிற திரைப்படத்தின் கதை ஆகும்.

இந்த கதையின் தழுவலாகவே தளபதி 68 எடுக்கப்படுகிறது என கூறப்படுகிறது. எனவே இந்த படத்திற்கு அதிக வரவேற்பை ஏற்படுத்தும் விதமாக இந்த செய்தி அமைந்துள்ளது.

Articles

parle g
madampatty rangaraj
To Top