தளபதி 69 திரைப்படத்தின் டைட்டில் இதுதான்.. சரியான டைட்டில்தான்..!

thalapathy 69

சினிமாவை விட்டு செல்ல இருக்கும் நிலையில் விஜய் தொடர்ந்து அஜித் இயக்குனர்கள் படங்களில் நடித்து வருகிறார். வெகு காலங்களாகவே விஜயும் அஜித்தும் போட்டி நடிகர்களாக இருந்து வந்தனர்.

அதனாலேயே பெரும்பாலும் அஜித் எந்த இயக்குனரோடு சேர்ந்து நடித்து வெற்றி படங்களை கொடுக்கிறாரோ அந்த இயக்குனர் படங்களில் விஜய் பெரிதாக நடிக்க மாட்டார். அதேபோல விஜய் பெரிதாக ஹிட் கொடுக்கும் இயக்குனர்களை வைத்து அஜித் எந்த படமும் பண்ண மாட்டார்.

மிக அரிதாக எப்போதாவதுதான் இருவரையும் வைத்து ஒரே இயக்குனர்கள் படம் பண்ணி இருப்பார்கள். ஆனால் இப்பொழுது இருவரும் நண்பர்கள் ஆகிவிட்டதால் அந்த போட்டி எல்லாம் இல்லாமல் போய்விட்டது.

தளபதி 69 படத்தின் பெயர்:

thalapathy 69
thalapathy 69

எனவே விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவானது. வெங்கட் பிரபு ஏற்கனவே அஜித்தை வைத்து மங்காத்தா திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

அதேபோல நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, துணிவு போன்ற திரைப்படங்களை இயக்கிய ஹெச்.வினோத்தான் இப்பொழுது விஜய்யின் 69 ஆவது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாமல் இருக்கிறது.

ஆனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் குறித்து ஒரு பெயர் தற்சமயம் பரவி வருகிறது. ஒன் லாஸ்ட் டைம் என்பதுதான் இந்த படத்தின் பெயராக இருக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. இதற்கு முந்தைய படத்தின் பெயரும் ஆங்கிலத்தில்தான் இருந்தது என்பதால் இந்தப் பெயர் இந்த படத்திற்கு வைக்கப்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.