Connect with us

Actor Prabhu Sivaji :பிரபு மகளின் டைவர்ஸ்க்கு இதுதான் காரணம்.. அதனால்தான் இப்போது மறுமணம்!.

aishwarya prabhu daughter

News

Actor Prabhu Sivaji :பிரபு மகளின் டைவர்ஸ்க்கு இதுதான் காரணம்.. அதனால்தான் இப்போது மறுமணம்!.

Social Media Bar

Prabhu Daughter Marriage: திரையுலகில் மதிப்புமிக்க குடும்பங்களில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது சிவாஜி கணேசனின் குடும்பமாகும். இவர்கள் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக நடித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபுவுன் மகள் ஐஸ்வர்யா பிரபல இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனை இரு நாட்கள் முன்பு திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த திருமணம் பெரிதாக வெளியில் சொல்லிக்கொள்ளாமல் அமைதியாகவே நடந்தது. முக்கியமான பிரபலங்கள் மட்டுமே இந்த திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர். ஏனெனில் இது ஐஸ்வர்யாவிற்கு இராண்டாவது திருமணம் என்பதே அதற்கு காரணமாகும்.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் முதல் திருமணம் எதனால் பிரிந்தது என்பதை குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது கருத்தை கூறியுள்ளார். பிரபு தனது மகள் ஐஸ்வர்யாவை தனது சொந்த தங்கையின் மகன் குணாலுக்கு திருமணம் செய்து வைத்தார்.

ஆனால் சொத்து விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. சிவாஜியின் சொத்துக்களை தனது மகள்களுக்கு பிரித்து கொடுப்பதில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரபுவின் தங்கை தேன்மொழிக்கும் பிரபுவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபுவின் மருமகன் குணாலும் தனது தாய் தேன்மொழி பக்கமே நின்றுள்ளார். இது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் அளவிற்கு பெரும் பிரச்சனையானது. இந்த நிலையில் கணவன் தனக்கு ஆதரவாக இல்லாமல் தாய்க்கு ஆதரவாக இருந்ததால் கோபமான ஐஸ்வர்யா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார்.

அதன் பிறகு மார்க் ஆண்டனி புகழ் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே தற்சமயம் அவர்கள் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர் என கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்!..

To Top