Cinema History
ஜெயிலர் சம்பளத்தால் கவலையில் இருந்த ரஜினிகாந்த்!.. சன் பிக்சர்ஸ் பரிசுக்கு இதுதான் காரணம்!..
தமிழ் சினிமாவில் சில குறிப்பிட்ட நடிகர்கள் திரைப்படங்கள் மட்டும் இவர்கள் நடித்தாலே ஹிட்டுதான் என்கிற நிலை உண்டு. அப்படியான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு இருக்கும் மார்க்கெட் காரணமாக தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கி வருகிறார் ரஜினிகாந்த்.
ஆனால் அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. அது குறைவான அளவிலேயே வசூல் செய்தது. இதனால் அவரது அடுத்த படத்தில் சம்பளம் குறைந்தது. அதுவரை 130 கோடி சம்பளம் வாங்கி வந்த ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்காக 80 கோடி ரூபாய்தான் சம்பளமாக வாங்கினார்.
ஆனால் ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. ஆனால் ரஜினிகாந்த் 50 கோடி குறைவாகவே சம்பளம் வாங்கியிருந்தார். எனவே அதை ஈடு செய்யும் வகையில் 10 கோடி மதிப்பில் ஒரு காரும் 30 கோடி பணமும் கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
மேலும் ரஜினிகாந்தின் 171 ஆவது படத்திற்கு 200 கோடி சம்பளம் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
