Connect with us

நான் குளிக்க 12000 லிட்டர் மினரல் வாட்டர் வேணும்!.. தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை..

actress nila

Cinema History

நான் குளிக்க 12000 லிட்டர் மினரல் வாட்டர் வேணும்!.. தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை..

Social Media Bar

திரை உலகில் கோலிவுட்டை பொறுத்தவரை கதாநாயகிகள் கொஞ்சம் அமைதியாகவே இருப்பார்கள். ஏனெனில் எப்போதுமே கதாநாயகிகளுக்கு சினிமாவில் மார்க்கெட்டிருக்காது.

ஹீரோக்கள் போல வெகுநாட்கள் கதாநாயகிகள் சினிமாவில் இருப்பதில்லை எனவே அவர்கள் இருக்கும் காலம் வரை எவ்வளவு சிரமப்பட்டு வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருப்பார்கள்.

நடிகை மீனா ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகைகள் எல்லாம் அப்படி நடித்தவர்கள்தான். ஆனால் எப்போது பாலிவட்டிலிருந்து தமிழில் கதாநாயகிகளை நடிக்க வைத்தார்களோ அப்போது முதல் பாலிவுட் கதாநாயகிகள் சீன் காட்டுவது என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்தது. சந்திரமுகி 2 படப்பிடிப்பிற்கு கூட கங்கனா ரனாவத்தை அழைத்த பொழுது அவர் கூட ஐந்து ஆறு பாதுகாப்பு ஆட்களை அழைத்துக் கொண்டு வந்தார்.

தமிழில் ஜாம்பவான் என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பில் இதை விட மோசமான ஒரு விஷயம் நடந்தது. பிரசாந்த் மற்றும் நடிகை நிலா நடித்து உருவான திரைப்படம் ஜாம்பவான். ஆனால் நிலா அதில் நடிக்கமாட்டேன் என கூறினார். இடையில் ஏற்பட்ட பிரச்சனையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

நடிகை நிலா வேற யாரும் அல்ல அன்பே ஆருயிரே திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தவர்தான். அவர் ஜாம்பவான் என்னும் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது குற்றாலத்தில் ஒரு படபிடிப்பு நடக்க இருந்தது. அதில் 12000 லிட்டர் தண்ணீர் உள்ள ஒரு தண்ணீர் தொட்டி இருந்தது.

அந்த தொட்டியில் கதாநாயகி குளிப்பதாக காட்சி இருந்தது ஆனால் நடிகை நிலா அந்த தண்ணீர் எல்லாம் எனக்கு ஒத்துக்காது அதில் 12000 லிட்டர் ஃபில்டர் தண்ணீரை கலந்தால்தான் நான் அதில் குளிப்பேன் என்று கூறிவிட்டார்.

அதெல்லாம் முடியாது என்று தயாரிப்பாளர் தரப்பில் சொன்னதால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு கிளம்பிய நடிகை நிலா, விமான நிலையத்தில் பேட்டி அளிக்கும் போது தயாரிப்பாளர்கள் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக பேட்டி கொடுத்து விட்டு சென்று விட்டார். அதன் பிறகு பேட்டி கொடுத்த படத்தின் இயக்குனர் உண்மையை விளக்கினார்.

பிறகு பல பிரச்சனைகளுக்கு பிறகுதான் மீண்டும் அவரது காட்சிகளை படக்குழுவினர் படமாக்கினர்

To Top