Cinema History
படம் வெளியாகி ஒரு வருஷத்துக்கு அடி தூளாக இருந்த சிவாஜி பாடல்!.. பிறகு இருந்த இடம் தெரியாம போயிட்டு!..
Sivaji Ganesan : தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இருந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். கருப்பு வெள்ளை சினிமாவில் இருந்து கலர் சினிமாவிற்கு மாறிய பொழுது சினிமாவில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருந்தன. டப்பிங் செய்வதில் கூட நிறைய மாறுதல்கள் ஏற்பட்டு இருந்தது.
அதனால் அப்பொழுது இருந்த பல நடிகர்களுக்கு அதை கையாள்வது சிரமமாக இருந்தது. ஆனால் சிவாஜி சில நாட்களிலேயே அவற்றை கற்றுக் கொண்டு தொடர்ந்து கலர் சினிமாக்களிலும் நடிக்க துவங்கினார். ஒரு வயதுக்கு பிறகு சிவாஜி கணேசன் துணை கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
படிக்காதவன் மாதிரியான திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் இருந்தாலும் கூட முக்கிய கதாபாத்திரமாக சிவாஜி கணேசன் இருப்பதை பார்க்க முடியும். அப்போது இருந்த நடிகர்களுக்கும் ஒரு திரைப்படமாவது சிவாஜிகணேசனுடன் சேர்ந்து நடித்திட வேண்டும் என்கிற ஆசை இருந்தது.
அப்படியான ஆசை சத்யராஜுக்கும் இருந்தது. இந்த நிலையில் சத்யராஜும் சிவாஜி கணேசனும் இணைந்து நடித்து உருவான திரைப்படம் தான் ஜல்லிக்கட்டு. மக்கள் மத்தியில் இந்த படம் குறித்து நல்ல வரவேற்பு இருந்தது.
அதற்கு முக்கிய காரணம் சத்யராஜும் சிவாஜி கணேசனும் சேர்ந்து நடிக்கும் முதல் படம் இதுதான் என்பதால்,. பொதுவாகவே சத்யராஜ் குசும்பு பிடித்த மனிதர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். அவரும் சிவாஜியும் இணைந்தால் எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்கிற கேள்வி இருந்தது.
அதேபோல ஜல்லிக்கட்டு திரைப்படமும் பல சிறப்புகளைக் கொண்ட படமாக இருந்தது. இந்த படத்தில் ஏற்கனவே சத்யராஜ் வேறு வேறு படங்களில் நடித்த கதாபாத்திரங்களாக வந்துதான் கொலைகளை நிகழ்த்துவார். இந்த படமும் கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் கதைக்கு நிகரான கதையை கொண்டிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் மற்றும் ஒரு குற்றவாளி இவர்கள் இருவரும் இணைந்து தங்களுக்கு தீங்கிழைத்தவர்களை சட்டத்திற்கு தெரியாமல் கொலை செய்வதே படத்தின் கதை.

இந்த படத்தில் ஏ ராஜா ஒன்றானோம் இன்று என்கிற பாடல் ஒன்று வரும் அந்தப் பாடலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அதை பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியமும் மனோவும் சேர்ந்து பாடினர். மனோவின் குரலை பொறுத்தவரை கிட்டத்தட்ட அதுவும் எஸ்.பி.பியின் குரல் மாறி தான் இருக்கும் என்றாலும் அவர்கள் இருவரும் சேர்ந்து பாடுவது என்பது ஒரு சிறப்பான விஷயமாகும்.
இதனால் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் மக்கள் மத்தியில் இந்த பாடல் மிகவும் பிரபலமாக இருந்தது அப்போதைய காலகட்டங்களில் அனைத்து fm ரேடியாக்களிலும் இந்த பாடல் அது ஒளி பரப்பப்பட்டிருக்கிறது ஆனால் அதற்குப் பிறகு இந்த பாடல் இருந்த சுவடு இல்லாமல் போய்விட்டது இப்பொழுது அதை யாரும் அதிகம் கேட்பதில்லை என்றாலும் எஸ்பிபி, மனோ காம்போவில் உருவான அந்த பாடல் ஒரு மதிப்பு மிக்க பாடலாகவே பார்க்கப்படுகிறது.
