Latest News
4 பேர் குடிச்சிட்டு ஒரே சமயத்துல..! நடிகை ரூபஸ்ரீக்கு நடந்த கொடுமை.. வெளிவந்த உண்மை
சமீபத்தில் ஹேமா கமிட்டியின் மூலம் வெளிவந்த தகவலால் மலையாள சினிமா கதி கலங்கி இருக்கும் நிலையில் இதன் விளைவு தமிழ், தெலுங்கு என தென்னிந்தியா சினிமாவை பரபரப்பாகி உள்ளது.
மலையாள சினிமாவில் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை எல்லாம் நடிகைகளுக்கு நடக்காது என நினைத்த நிலையில் தற்போது மற்ற திரையுலகை விட கேரளா சினிமா மிகவும் மோசமாக போய்க் கொண்டிருப்பதை நாம் கேரள ஹேமா கமிட்டியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் தற்போது பிரபல மலையாள நடிகையான ஷகிலா நடிகை ரூபஸ்ரீக்கு நடந்த பிரச்சினையைப் பற்றி கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
கேரளா சினிமாவை கதி கலங்க வைத்த ஹேமா கமிட்டி அறிக்கை
சில வருடங்களுக்கு முன்பு மலையாள நடிகை ஒருவருக்கு நடந்த வன்முறை காரணமாக கேரளா அரசு மலையாள நடிகைகளின் பாதுகாப்பிற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
அந்த குழுவிற்கு ஹேமா கமிட்டி என பெயர் வைத்து, நடிகைகளுக்கு சினிமா துறையில் ஏற்படும் பல பிரச்சனைகளும் அதில் பதிவு செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் நடிகைகள் தைரியமாக தங்களுக்கு நடந்த பிரச்சனைகளை ஹேமா கமிட்டியின் மூலம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது ஹேமா கமிட்டி அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒவ்வொரு தகவலாக வெளிவந்திருப்பது பெரும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.
மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை ஊக்குவிப்பதே 10 பிரபலமான நடிகர்களின் தலைமை தான் என்ற பெரும் அதிர்ச்சியான சம்பவம் வெளிவந்த நிலையில், பிரபல முன்னாள் நடிகரின் மகள் ஒருவர் கேரள சூப்பர் ஸ்டார் மீது குற்றம் சாட்டியிள்ளார். இது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
மேலும் அந்த நடிகரின் மகள் தேவைப்பட்டால், அந்த நடிகரின் பெயரை வெளியிடவும் தயார் என கூறியிருப்பது, இன்னும் அதிர்ச்சியை அளித்திருக்கும் நிலையில் மேலும் யார் யார் இந்த விஷயங்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்த அறிவிப்பு இனி வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
ஹேமா கமிட்டியின் மூலம் வெளிவந்த அறிக்கையினால் கேரளா நடிகர் சங்கத்திலிருந்து பலரும் விலகிய நிலையில், மோகன்லால் ஏன் விலகினார்? என்ற கேள்வியையும் ஷகிலா கேட்டுள்ளார். தற்போது அவர் பிரபல நடிகை ஒருவரைப் பற்றி கூறியிருக்கும் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ரூபஸ்ரீக்கு நடந்த சம்பவம்
ஹேமா கமிட்டியின் மூலம் ஒவ்வொரு தகவலாக வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில் நடிகர் சங்கத்தில் இருந்த மோகன்லால் ஏன் விலகனும்? அவர் பெயர் வெளிவராத நிலையில் இவர் இவ்வாறு செய்வது சரியா? என கேள்வி கேட்டு இருக்கும் சகிலா, பிரச்சனை என்றால் நடிகர் சங்கம் தான் முன் நின்று பேசணும். ஆனால் சங்கமே கலைந்து போற நிலைமை இங்கு மட்டும் தான் நடக்கிறது என அவர் தெரிவித்திருக்கிறார்.
மலையாள சினிமாவில் அக்ரீமெண்ட்லயே அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலும் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் போது இவர்கள் நம்மை கூப்பிட மாட்டார்களா? என்ற எண்ணம் தான் நமக்குத் தோன்றும். எனக்கும் அவ்வாறு தோன்றி இருக்கிறது. இவர்களாகவே போவதால் இது அவ்ளோ பெரிய விஷயமாக மாறாது.
இந்நிலையில் ப்ரொடியூசர், டைரக்டர், மேனேஜர் எல்லோரும் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணியே ஆக வேண்டும் என சொல்லுவார்கள். ஏன் என்று கேட்டால் அக்ரீமெண்டிலேயே அட்ஜஸ்மென்ட் பண்ண வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது என அவர்கள் தெரிவிப்பார்கள்.
இந்நிலையில் தான் ரூபஸ்ரீ ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது நான் தங்கி இருந்த அறையின் எதிர் ரூமில் அவர் இருந்தார். ஒரு நாள் ஒரே அலறல் சத்தம் போய் பார்த்ததற்கு, நாலஞ்சு ஆளுங்க ஃபுல்லா குடிச்சிட்டு அந்த பொண்ணு ரூமில் நிற்கிறார்கள்.
நாங்கள் போய் கேட்டதற்கு எங்களிடம் சண்டைக்கு வந்து விட்டார்கள். அதன் பிறகு நான், என் தம்பி, ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் போயிருந்தோம். குடிச்சிட்டு வந்த நபர்கள் என்னை அடிச்சு ஒரே பிரச்சனையாக நடந்து விட்டது. அதன் பிறகு ஒருவர் வண்டியில் ரூபஸ்ரீயை ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தோம். இவ்வாறு பல சம்பவங்கள் கேரள சினிமாவில் நடந்திருக்கிறது என ஷகிலா குறிப்பிட்டு இருக்கிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்