காசு கொடுத்து படம் பார்த்துட்டு பிஞ்சு போன செருப்பை வச்சிதான் அடிக்கணும்!.. ஜிவி பிரகாஷை நேரடியாக தாக்கிய பத்திரிக்கையாளர்!..

இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக மாறியவர் நடிகர் ஜிவி பிரகாஷ். வெயில் திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு மெல்ல மெல்ல கதாநாயகனாகவும் உருவெடுத்தார்.

ஜிவி பிரகாஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது என்றே கூற வேண்டும். நிறைய திரைப்படங்கள் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி இன்னமும் வெளியாகாமல் இருக்கிறது. இப்படியே கிட்டத்தட்ட 12 படங்கள் அவர் நடித்து இன்னமும் வெளி வராமல் இருக்கிறது.

gv-prakash
gv-prakash
Social Media Bar

இந்த நிலையில் இதுக்குறித்து விமர்சனம் அளித்துள்ளார் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு.  அதில் அவர் கூறும்போது 190 ரூபாய் கொடுத்து படத்தை பாத்துட்டு பிஞ்சு போன செருப்பை வச்சிதான் அடிக்கணும். வாரத்துக்கு ஒரு படம் வெளியிடுறாரு. அவரை வெள்ளிக்கிழமை ராமசாமின்னே சொல்லலாம்.

ஒவ்வொரு வாரமும் ரபேல், டியர், கள்வன்னு படம் வருது, ஆனால்  எதுவுமே ஓட மாட்டேங்குது. இப்படி மோசமா படம் எடுக்க வேண்டியது. அப்புறம் மலையாள படம் ஓடுதுன்னு கதற வேண்டியது என வெளிப்படையாக ஜிவி பிரகாஷை விமர்சித்துள்ளார் செய்யாறு பாலு.

Source: Link