ஸ்ரீதர் சொன்ன அந்த ஒரு வார்த்தை!.. சோலி முடிஞ்சு!.. படத்தையே நிராகரித்த இசையமைப்பாளர்!..

Director Sridhar : தமிழ் சினிமாவில் முக்கியமான பிரபலங்களை ஆறுமுகப்படுத்திய இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஸ்ரீதர். எம்.ஜி.ஆர் சிவாஜி கால கட்டங்களில் பல வெற்றி படங்களை தொடர்ந்து எடுத்தவர் இயக்குனர் ஸ்ரீதர்.

அதனாலே பெரிய நடிகர்கள் கூட அவரது திரைப்படங்களில் நடிப்பதற்கு வெகுவாக ஆர்வம் காட்டி வந்தனர். வெண்ணிற ஆடை என்கிற திரைப்படத்தில் முதன் முதலில் நடிகை ஜெயலலிதாவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியதும் இயக்குனர் ஸ்ரீதர் தான்.

அதேபோல இப்போது வரை மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் காதலிக்க நேரமில்லை என்கிற திரைப்படத்தின் இயக்குனர் இவர்தான். அப்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த பலருக்கும் உதவி செய்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீதர்.

Social Media Bar

அப்படியாக பாடகராக இருந்த ஏ.எம் ராஜாவை இசையமைப்பாளராக மாற்றியதும் ஸ்ரீதர்தான். ஸ்ரீதர் தன்னுடைய முதல் திரைப்படமான கல்யாண பரிசு திரைப்படத்தில் ஏ.எம் ராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.

அதற்கு முன்பே அவரை இசையமைப்பாளர் ஆக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார் ஸ்ரீதர். அதன்படி தனது முதல் திரைப்படத்திலேயே ஏ.எம் ராஜாவை இசையமைப்பாளர் ஆக்கினார். அதன் பிறகு நிறைய திரைப்படங்களில் ஏ.எம் ராஜாவை சேர்த்துக்கொண்டார் ஸ்ரீதர்.

ஏ.எம் ராஜாவின் குணம்:

ஆனால் ஏ.எம் ராஜாவிடம் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் அவரிடம் ஒரு வார்த்தை கூட தவறாக பேசிவிடக்கூடாது. அப்படி பேசிவிட்டால் அவர் அவர்களுடன் வேலை பார்க்க மாட்டார்.

இப்படி இருக்கும் பொழுது தேன்நிலவு என்கிற படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அதற்கான பின்னணி இசையை ஏ.எம் ராஜா இசை அமைத்து வந்தார். அந்த நேரத்தில் உதவி இயக்குனர் தாமதமாக வந்ததால் அவரை திட்டிக் கொண்டிருந்தார் ஸ்ரீதர்.

ஆனால் ஏ.எம் ராஜா தன்னை தான் திட்டுகிறார் ஸ்ரீதர் என்று தவறாக புரிந்து கொண்டு அந்த படத்திற்கு இசையமைக்க மறுத்துவிட்டார். பிறகு எவ்வளவோ ஸ்ரீதர் எடுத்துக் கூறியும் ஏ.எம் ராஜா கேட்கவில்லை அதுதான் அவருடைய குணமே அவரிடம் எப்பொழுதும் பார்த்து பழக வேண்டும் என்கிற நிலை இருந்தது. இருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரிடமே அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறார் ஏ.எம் ராஜா.