Cinema History
மொட்டை ராஜேந்திரனுக்கு முடி போன காரணம் இதுதான்… இயக்குனர் செய்த சூழ்ச்சி!..
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மேனாக வெகு நாட்கள் பணிப்புரிந்து பிறகு இயக்குனர் பாலா மூலமாக வில்லனாக அறிமுகமானவர் நடிகர் ராஜேந்திரன். நான் கடவுள் திரைப்படத்தில் மிக மோசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து மிளகா, உத்தம வில்லன் போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார் ராஜேந்திரன். அதன் பிறகு அவருக்கு காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வரிசையாக காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.
மொட்டை ராஜேந்திரனுக்கு அவரது புருவங்களில் கூட முடி இல்லாமல் இருப்பதை பார்க்க முடியும். இதற்கு ஒரு இயக்குனரே காரணமாக இருந்துள்ளார். ஒரு மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது அதில் ஸ்டண்ட் நடிகர் ஆற்றில் குதிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.
அந்த காட்சியில் நடிப்பதற்கு அங்கிருந்த ஸ்டண்ட் நடிகர்கள் மறுத்துவிட்டனர். ஏனெனில் தொழிற்சாலை கழிவுகள் அந்த ஆற்றில் சென்றுக்கொண்டிருந்தன. இந்த நிலையில் இந்த விஷயத்தை ராஜேந்திரனிடம் சொல்லாமலேயே அவரை அந்த காட்சியில் நடிக்க வைத்துள்ளனர்.
முதல் முறை ஆற்றில் குதிக்கும்போதே தண்ணீரில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பது அவருக்கு தெரிந்துள்ளது. ஆனால் இயக்குனர் டேக் சரியாக வரவில்லை என மீண்டும் ஆற்றில் குதிக்க சொல்லியுள்ளார். மொட்ட ராஜேந்திரனும் மீண்டும் குதித்து எழுந்துள்ளார். இரண்டாவது முறை தண்ணீரில் இருந்து எழும் போதே அவரது பாதி தலைமுடியை காணவில்லை. அதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் ராஜேந்திரன்.
பிறகு உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கேயும் ஒன்றும் செய்ய முடியாது என கையை விரித்து விட மொத்த முடியையும் இழந்துள்ளார் ராஜேந்திரன். சினிமாவில் தொடர்ந்து ஸ்டண்ட் மேன்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்துள்ளது. அதற்கு ராஜேந்திரனே முக்கிய சாட்சியாக இருக்கிறார்.
