Connect with us

நடிகர் ஜெய் தவறவிட்ட மாஸ் படங்கள்!.. அதுல மட்டும் நடிச்சிருந்தா வேற லெவல் போயிருப்பார்!…

ratchasan

Cinema History

நடிகர் ஜெய் தவறவிட்ட மாஸ் படங்கள்!.. அதுல மட்டும் நடிச்சிருந்தா வேற லெவல் போயிருப்பார்!…

Social Media Bar

தமிழ் சினிமாவில் முதன் முதலாக பகவதி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் ஜெய். அதற்கு பிறகு சில வருடங்கள் கழித்து கதாநாயகனாக 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 28 திரைப்படத்தில் நடித்தார்.

சென்னை 28 திரைப்படம் அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் கிடைக்க துவங்கின. சென்னை 28 ஐ தொடர்ந்து சுப்ரமணியப்புரம் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

சுப்புரமணியப்புரம் திரைப்படத்தில் அவர் நடிக்கும்போது கெளதம் மேனன் இயக்கும் திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிப்பதாகவும், ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் சுப்புரமணியப்புரம் திரைப்படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட் ஆகி இருந்தார் ஜெய்.

எனவே அந்த திரைப்படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. அந்த திரைப்படம் பிறகு சிம்பு நடித்து விண்ணை தாண்டி வருவாயா என்கிற பெயரில் வெளியானது. அதே போல சிவா மனசுல சக்தி திரைப்படத்திலும் ஜெய் நடிக்க இருந்தார்.

ஆனால் சுப்புரமணியப்புரம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் காலத்தாமதமானது. அதனால் இயக்குனர் ராஜேஷ், ஜீவாவை வைத்து அந்த படத்தை இயக்கினார். இதே போல ராட்சசன் திரைப்படத்திலும் ஜெய்க்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போதும் வேறு படங்களில் கமிட் ஆகி இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டார் ஜெய்.

இந்த படங்களில் எல்லாம் நடித்திருந்தால் இப்போது நடிகர் ஜெய்யின் மார்க்கெட் அதிகரித்திருக்கும். இந்த விஷயத்தை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top