Connect with us

எம்.ஜி.ஆர் முதன் முதலாக பாடிய கொள்கை பாடல்!.. ஏகப்பட்ட சம்பவம் அதில் நடந்துச்சு!..

MGR

Cinema History

எம்.ஜி.ஆர் முதன் முதலாக பாடிய கொள்கை பாடல்!.. ஏகப்பட்ட சம்பவம் அதில் நடந்துச்சு!..

Social Media Bar

Actor MGR : தமிழ் சினிமாவில் பேரும் புகழும் பெற்ற நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்தப்போது அனைத்து கதாபாத்திரங்களிலும் எம்.ஜி.ஆர் நடித்து வந்தார். அப்போது இருந்த மக்கள் சினிமாவை நிஜம் என்றே நம்பி வந்தனர்.

நிஜமாக நடக்கும் நிகழ்வுகளைதான் படம் பிடித்து நமக்கு காட்டுகிறார்கள் என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்தது. இதனால்தான் அவர்கள் நம்பியார் மாதிரியான வில்லன் நடிகர்களை வெகுவாக வெறுத்தார்கள். கிராம புறங்களில் நம்பியார் மாதிரியான நடிகர்கள் வந்தாலே மக்கள் தெறித்து ஓடிய சம்பவங்களும் நடந்தன.

இதனை அறிந்த எம்.ஜி.ஆர் மக்கள் மத்தியில் இடம் பிடிக்க சினிமா ஒரு நல்ல பாலமாக இருக்கும் என நினைத்தார். எனவே திரைப்படங்களில் புரட்சி செய்பவராகவும், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவராகவுமே நடிக்க வேண்டும் என முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.

இந்த நிலையில் மலைக்கள்ளன் திரைப்படத்தில் இருந்து அதை துவங்கினார். எம்.ஜி.ஆருக்கான துவக்கம் அதுதான் என்று கூற வேண்டும். ஏனெனில் எம்.ஜி.ஆருக்காக எக்கச்சக்க கருத்து கொள்கை பாடல்களை பாடிய டி.எம் சவுந்தர்ராஜன் தனது முதல் பாடலை இந்த படத்தில்தான் பாடினார்.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்கிற அந்த பாடல்தான் எம்.ஜி.ஆருக்காக பாடிய முதல் கருத்து பாடல். அதன் பிறகு கருத்து பாடல்களுக்கு இருக்கும் மதிப்பை அறிந்த எம்.ஜி.ஆர் அவரது அனைத்து படங்களிலுமே கருத்து பாடல்களை வைக்க துவங்கினார்.

To Top