Connect with us

படம் ஓடுனா ஆக்டர்.. இல்லன்னா டாக்டர்.. – பிரசாந்த்க்கு தியாகராஜன் போட்ட கண்டிஷன்!

News

படம் ஓடுனா ஆக்டர்.. இல்லன்னா டாக்டர்.. – பிரசாந்த்க்கு தியாகராஜன் போட்ட கண்டிஷன்!

Social Media Bar

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாய் என அழைக்கப்பட்டவர் பிரசாந்த். இவரது தந்தை தியாகராஜனின் மூலம் இவர் சினிமாவிற்கு வந்தார். தன்னுடைய 17வது வயதிலேயே திரைத்துறைக்கு வந்தவர் பிரசாந்த்.

அதற்கு முன்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. பிரசாந்த் ஒரு இயல்பு மனிதனின் வாழ்க்கையைதான் வாழ வேண்டும் என நினைத்த தியாகராஜன் தனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்கிற செய்தியையே திரை உலகில் யாருக்கும் சொல்லவில்லை. அவருடன் நெருங்கி பலகும் பலருக்கும் கூட இந்த செய்தி தெரியாது.

இந்த நிலையில் பிரசாந்த் 10வது படித்துக்கொண்டிருந்த சமயம். அவரது வீட்டிற்கு நடிகர் சத்யராஜ் பத்திரிக்கை கொடுப்பதற்காக வந்திருந்தார். அப்போது வீட்டில் இருந்த பிரசாந்திடம் தியாகராஜன் இல்லையா? என கேட்டுள்ளார்.

அதற்கு பிரசாந்த் அப்பா வெளியே சென்றுள்ளார் என கூறியுள்ளார். இதை கேட்டவுடன் சத்யராஜ் அதிர்ச்சி அடைந்துள்ளார். நீங்கள் தியாகராஜன் பையனா? என்று கேட்டுள்ளார். அதற்கு பிறகு இந்த செய்தி திரையுலகில் தீயாக பரவ துவங்கி பிரசாந்திற்கு பட வாய்ப்புகள் வர துவங்கியுள்ளன.

ஆனால் 12 வது முடிக்கும் வரை சினிமாவில் நடிக்க கூடாது என வீட்டில் விதிமுறை வைத்துவிட்டனர். 12 வது முடித்துவிட்டு மருத்துவர் ஆவதற்கான முயற்சியில் இருந்தார் பிரசாந்த். அப்போது மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் வந்தன.

அப்போது அவரது தந்தை “நீ ஏற்கனவே டாக்டர் ஆகணும்னு முடிவு பண்ணிட்ட. ஆனால் இடையில் ஒரு மூன்று மாதம் இடைவெளி இருக்கிறது.  இந்த இடைவெளியில் ஒரு படம் நடி. படம் ஓடினால் ஆக்டர் ஆகிடு. ஓடலைனா டாக்டர் ஆகிடு” என கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிரசாந்த் நடித்த படம்தான் வைகாசி பொறந்தாச்சு. ஆனால் இந்த படம் நல்ல ஹிட் கொடுத்ததை அடுத்து பிரசாந்த் ஒரு நடிகரானார்.

To Top