Gossips
அம்மாவே மனைவியா மாறுன கொடுமை.. கண்டுப்பிடிச்ச டிடெக்டிவ்.. இப்படியும் நடக்குது!.
பொதுவாக இந்த உலகில் வாழம் உயிரனங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால் அம்மா, அப்பா, தங்கை, அண்ணன், தம்பி போன்ற அனைத்து உறவுகளுடனும் நாம் வாழ்ந்து வருகிறோம்.
மேலும் நாம் படிக்கும் இடங்களிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் சில நபர்கள் புது முகங்களாக அறிமுகமாகி அவர்களையும் நாம் நண்பர்களாக பழகி வருகிறோம்.
அந்த வகையில் நம்முடைய கலாச்சாரம் என்பது யார் யார் எந்தெந்த உறவுகள் என்பதை வகுத்து வைத்திருக்கிறது. இதுவரை நாம் அதனை பின்பற்றி தான் நடந்து கொண்டிருக்கிறோம். ஆனால் தற்பொழுது ஒரு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
அதனைப் பற்றி டிடெக்டிவ் யாஸ்மின் பிரபல சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார். அது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டிடெக்டிவ் யாஸ்மின் கூறிய தகவல்
டிடெக்டிவ் யாஸ்மின் பேசும் போது நான் பல வகையான கேஸ்களை கையாண்டு உள்ளேன். ஆனால் நான் சமீபத்தில் எதிர்கொண்ட ஒரு கேஸ் என்னை பெரிதளவில் பாதித்தது.
மேலும் உலகத்தில் இவ்வாறெல்லாம் உள்ளார்களா? என்பது போல நான் நினைத்துக் கொண்டேன். எனவே நான் அந்த கேஸை எடுத்து விசாரணை செய்யவில்லை. மேலும் அதில் பாதிக்கப்பட்ட பையனுக்கு உதவ வேண்டும் என நான் நினைத்தேன்.
மகனுக்கு மனைவியாக மாறிய தாய்
யாஸ்மின் கூறும் போது வெளிநாட்டில் இருந்து ஒரு போன் எனக்கு வந்தது. அதில் பேசிய ஒருவர், நான் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன். அவரை நான் வெளிநாட்டிற்கு அழைத்து வரலாம் என நினைத்தேன். ஆனால் தற்பொழுது அவர் இங்கு வருவதற்கு மறுக்கிறார். அவர் வேறு ஒரு தொடர்பில் இருப்பாரா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது. அதனை நீங்கள் தான் கண்டுபிடித்து கூற வேண்டும் என என்னிடம் கூறினார்.

நான் யார் அந்தப் பெண் என விசாரித்த போது எனக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. காரணம் அந்தப் பையன் கூறும்போது, அந்த பெண் என்னுடைய அம்மா என தெரிவித்தார்.
சிறுவயதில் கணவனை இழந்த பெண்
அவரிடம் நான் தொடர்ந்து பேசிய போது பல தகவல்கள் கூறினார். அப்பொழுது என்னுடைய அப்பா எனக்கு 2 வயதாக இருக்கும் பொழுது இறந்துவிட்டார். அதன் பிறகு என் அம்மா மட்டும் தான் என்னை வளர்த்தார். ஆனால் நான் 15 வயதாக இருக்கும் பொழுது என்னிடம் என் அம்மா வேறு மாறியாக நடந்து கொண்டார்.
இதனைப் பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. சொல்லப்போனால் நாங்கள் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வந்தோம். நான் பலமுறை என் அம்மாவிடம் கேட்டு இருக்கிறேன். என்னுடைய நண்பர்களின் அம்மா எல்லாம் இவ்வாறு இல்லை. நீங்கள் மட்டும் ஏன் இவ்வாறு இருக்கிறீர்கள் என கேட்ட போது நான் உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். மேலும் என்னை விட உன்னை யாரும் நல்லபடியாக பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என என்னிடம் அழுது புலம்பினார்.
அம்மாவின் பாசம் எனக்கு தெரியாது
இந்நிலையில் அம்மாவின் பாசம் என்பது எவ்வாறு இருக்கும் என எனக்கு தெரியாது. காரணம் நான் சிறுவயதாக இருக்கும் பொழுதே என் அம்மா இதுபோல என்னிடம் நடந்து கொண்டுதான் இருப்பார். அதனால் மற்ற அம்மாவின் பாசங்கள் எவ்வாறு இருக்கும் என எனக்கு தெரியாது. எனவே நானும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வந்தோம். சொல்லப் போனால் என் அம்மாவிற்கு 15 வயதாக இருக்கும் பொழுது திருமணம் ஆனது. அவரின் 16 ஆவது வயதில் நான் பிறந்தேன் என அந்தப் பையன் கூறினான்.
வேறு ஒருவருடன் தொடர்பில் அம்மா
நாங்கள் இவ்வாறாக இருப்பது வெளியில் உள்ள மற்றவர்களுக்கு தெரியாது. நாங்கள் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைத்தோம். அதனால் நான் என் அம்மாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என முடிவு செய்தேன். நான் இங்கு வந்த பிறகு என்னுடைய அம்மா முதலில் வருவதாக கூறினார். பிறகு இப்பொழுது நான் வரவில்லை என கூறுகிறார். அதனால் எனக்கு சந்தேகம் இருக்கிறது என அந்த பையன் தெரிவித்தார்.

இதற்கு யாஸ்மின் அந்தப் பையனிடம் பேசி இது தவறான உறவு நீ இவ்வாறு செய்யக்கூடாது உன் அம்மாவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தால் சந்தோஷமாக நினைத்து அதனை அப்படியே விட்டு விடு என கூறியதாக யாஸ்மின் கூறினார்.
மேலும் யாஸ்மின் விசாரித்தபோது அந்த அம்மாவும் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், தற்போது அந்தப் பையன் மனம் திருந்தி விட்டதாகவும், அவர் பிரபல சேனல் ஒன்றில் பேட்டி அளித்திருக்கிறார்.
இதுபோல ஒரு பெண் மெச்சூரிட்டி இல்லாத வயதில் திருமணம் செய்து கொண்டால் அவர் எவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார் என்பதை இதன் மூலம் தெரிகிறது என்றும், இது உடல் தேவைக்கானது மட்டுமல்லாமல், அவருக்கு தன்னுடைய மகன் அவரை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது என்பதும் ஒன்று. மேலும் 15 வயதில் திருமணம் நடக்கும் பொழுது அந்தப் பெண் குழந்தையாக தான் இருந்திருப்பாள். எனவே இது அவரின் தவறல்ல அவர் மெச்சூரிட்டி இல்லாமல் இவ்வாறு நடந்து கொண்டார். தற்பொழுது இருவரும் திருந்தி விட்டார்கள் என யாஸ்மின் தெரிவித்தார்.
