Connect with us

நேரம் பார்த்து அடி மடியில் கையை வச்சிட்டார்… லியோ தயாரிப்பாளரால் நஷ்டத்தில் நிற்கும் திரையரங்குகள்!..

vijay lalith

News

நேரம் பார்த்து அடி மடியில் கையை வச்சிட்டார்… லியோ தயாரிப்பாளரால் நஷ்டத்தில் நிற்கும் திரையரங்குகள்!..

Social Media Bar

தற்சமயம் திரையரங்குகளில் வந்த திரைப்படத்திலேயே பெரும் வரவேற்பை பெற்ற பாடமாக லியோ திரைப்படம் இருக்கிறது. முதல் வாரமே கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் முக்கால்வாசி திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் போர்டு போடும் அளவிற்கு கூட்டம் வந்தது.

ஆனால் இந்த கூட்டம் இவ்வளவு வந்தும் இதனால் திரையரங்குகளுக்கு பெரிதாக பலன் இல்லை என்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தனது பேட்டியில் கூறியுள்ளார். இந்த லியோ திரைப்படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனம்தான் தயாரித்தது. அதன் உரிமையாளரான லலித் செய்த வேலையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பொதுவாக திரையரங்குகளை பொறுத்த வரை ஒரு படம் வெளியாகும் பொழுது முதல் வாரம் படத்தின் லாபத்தில் இருந்து 30 சதவீதம் திரையரங்குகளுக்கு கொடுக்கப்படும். மீத லாபம் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர்களை சேரும்.

vijay leo
vijay leo

ஆனால் மாஸ்டர் திரைப்படம் வெளியான பொழுது தயாரிப்பாளர் லலித் படத்திற்கு 20 சதவீதம்தான் திரையரங்கிற்கு வழங்க முடியும் என்று கூறியிருந்தார். ஆனால் அப்பொழுது கொரோனா சமயம் என்பதால் திரையரங்குகள் அதற்கு ஒப்புக்கொண்டன.

இருந்தாலும் அதற்குப் பிறகு வந்த வலிமை துணிவு வாரிசு போன்ற திரைப்படங்களுக்கு அந்த விதியை பின்பற்றவில்லை. ஆனால் தற்சமயம் மீண்டும் லியோ திரைப்படத்தை வெளியிடும் பொழுது 20 சதவீதம் பங்குதான் தர முடியும் என்று கூறியுள்ளார் லலித்.

இதனால் கடுப்பான சென்னை திரையரங்குகள் லியோ படத்தை வெளியிடவே முடியாது என்று அறிவித்தன. ஆனால் மற்ற திரையரங்குகளால் அதை செய்ய முடியவில்லை ஏனெனில் விடுமுறை நாள் சமயத்தில் லியோ திரைப்படம் வெளியாவதால் வேறு எந்த திரைப்படமும் அப்போது வெளியிடப்படவில்லை.

எனவே லியோ திரைப்படத்தை வாங்கவில்லை என்றால் அவர்களுக்கு திரையரங்கில் போடுவதற்கு படம் இல்லை என்கிற நிலை இருந்தது. எனவே வேறு வழியில்லாமல்தான் நாங்கள் லியோ திரைப்படத்தை வாங்கி ஓட்டினோம் அதில் லாபம் என்று பெரிதாக எங்களுக்கு எதுவும் வரவில்லை என்று நேரடியாகவே கூறியுள்ளார் திருப்பூர் சுப்ரமணியம். இந்த விடுமுறை நாளை கணக்கில் கொண்டு தான் இப்படி ஒரு வேலையை தயாரிப்பாளர் பார்த்து விட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

To Top