Tamil Cinema News
கலாச்சாரத்தை சீரழிக்கும் ஓ.டி.டி தளங்கள்..! இதை செய்ய வேண்டும்..! அதிர்ச்சி கொடுத்த திருமாவளவன்..!
மக்கள் மத்தியில் ஓ.டி.டி என்பது தற்சமயம் திரையரங்குகளை விடவும் அதிகமாக மக்கள் மத்தியில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. கொரோனா சமயங்களில் திரையரங்குக்கு செல்ல முடியாதவர்கள் கூட ஓ.டி.டியில் திரைப்படங்களை பார்த்து வந்தனர்.
அந்த அளவிற்கு ஓ.டி.டி மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் இந்தியாவில் தொடர்ந்து ஓ.டி.டிகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
எனவே ஓ.டி.டி இப்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இதற்கு நடுவே தற்சமயம் கேபிள் ஆப்பரேட்டர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஓ.டி.டிக்கு எதிராக போராடி வருகின்றனர்.
ஓ.டி.டி குறித்து திருமாவளவன்:
இந்த நிலையில் ஓ.டி.டியில் சப்ஸ்க்ரைப் செய்து பார்ப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளதால் அவர்கள் கேபிள் டிவி பக்கமே செல்வதில்லை. இதனால் ஓ.டி.டி ஆப்கள் கேபிள் டிவிக்கு எதிராக மாறியுள்ளது.
இதனையடுத்து தொல்.திருமாவளவனும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டார். அதில் அவர் பேசும்போது கலாச்சாரத்தை சீரழிக்கும் ஓ.டி.டி தளங்களை தடை செய்ய வேண்டும் என பேசியுள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
