Special Articles
போர் தொடர்பாக தமிழில் வெளிவந்த 07 முக்கிய திரைப்படங்கள்!.
உலக அளவில் எல்லா சினிமாக்களிலும் போர் தொடர்பான திரைப்படங்கள் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன. போருக்கு செல்லும் வீரன், போரால் மக்கள் படும் பாடு, போரால் ஏற்படும் வறுமை, போருக்குள் ஒரு காதல் என கதைக்களம் மாறுப்பட்டாலும் போர் என்பதே படத்தின் மைய கதையாக இருக்கும்.
இரு நாடுகளுக்கு நடுவே நடப்பது மட்டுமே போர் என்று ஆகிவிடாது. ஒரே நாட்டுக்குள் நடக்கும் உள்நாட்டு யுத்தம் கூட போர்தான். அப்படியாக தமிழில் போர் தொடர்பாக வந்த சில திரைப்படங்களின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்தியன் (1996):
1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும். இரண்டாம் உலகப்போர் நடந்துக்கொண்டிருந்த சமகாலத்தில் இந்தியாவில் விடுதலையை மீட்டெடுக்க சுபாஷ் சந்திரப்போஸ் இந்திய தேசிய இராணுவம் என்கிற இராணுவம் ஒன்றை அமைத்தார். அதில் போராட்டக்காரராக இருந்த சேனாபதி என்னும் நபரை வைத்து செல்லும் படமே இந்தியன்.
வீரப்பாண்டிய கட்டப்பொம்மன் (1959)
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் பி.ஆர் பந்துலு இயக்கத்தில் வெளிவந்த வரலாற்று திரைப்படம் வீரப்பாண்டிய கட்டபொம்மன். இந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் மோலோங்கிய சமயத்தில் அதனை எதிர்த்த பல முக்கிய தலைவர்களில் முக்கியமானவர் வீரப்பாண்டிய கட்டபொம்மன். எனவே அவரது கதையை சிவாஜி கணேசனை வைத்து படமாக்கினர்.
கன்னத்தில் முத்தமிட்டாள் (2002)
2002 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால். இலங்கையில் சிங்களர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் நடந்த போருக்கு நடுவே தனது தாயை தேடும் மகளின் கதையாக கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் இருந்தது. இதனால் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இப்போது வரை பிரபலங்கள் பலரும் இந்த படத்தை புகழ்ந்து பேசுவதை பார்க்க முடியும்.
மதராசப்பட்டினம் (2010)
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஒரு ஆங்கிலேய பெண்ணுக்கும், தமிழ்நாட்டை சேர்ந்த வண்ணான் இளைஞனுக்கும் இடையே ஏற்படும் காதலை அழகாக கூறும் திரைப்படம் மதராசப்பட்டினம். அந்த படத்தின் செட் ஒர்க்கிற்காகவே அப்போது வெகுவாக பேசப்பட்ட திரைப்படமாக மதராசப்பட்டினம் திரைப்படம் இருந்தது.
ஆயிரத்தில் ஒருவன் (2010)
இந்தியா ஒரு நாடாக மாறுவதற்கு முன்பு ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு மன்னர்கள் ஆண்டு வந்தனர். அப்படியாக தமிழ்நாட்டை சோழர், பாண்டியர் என்கிற இரண்டு குழு ஆண்டு வந்தது. இதனால் வரலாறு நெடுகிலும் இவர்களுக்கு இடையே போர் நடந்து வந்தது.
அந்த போர் இப்போதைய காலக்கட்டத்திலும் தொடர்ந்தால் அது எப்படி இருக்கும் என்பதை ஃபேண்டசி ஜானரில் பேசிய திரைப்படம்தான் ஆயிரத்தில் ஒருவன்.
காற்று வெளியிடை (2017)
கார்கில் போர் நடந்துக்கொண்டிருந்த சமயத்தில் அதில் பங்குபெறும் வீரனுக்கு ஒரு பெண்ணோடு காதல் ஏற்படுகிறது. அவன் விமானப்படை வீரனாக இருக்கின்றான். இந்த பெண் மருத்துவராக இருக்கிறாள். இவர்கள் இருவருக்குமிடையே உள்ள காதலை கூறும் திரைப்படமாக காற்று வெளியிடை உள்ளது.
07.பொன்னியின் செல்வன்
சோழ சாம்ராஜ்யத்தின் பெரும் மன்னராக இப்போதும் அறியப்படுபவர் மன்னர் ராஜ ராஜ சோழன். இவரது பெருமைகள் பல இருந்தாலும் ஒரு புனைவு கதையாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நாவல்தான் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல்
இதனை அடிப்படையாக கொண்டு அதுவே திரைப்படமாகவும் வந்தது. கதைப்படி பாண்டிய மன்னரை ராஜ ராஜ சோழனின் அண்ணனான ஆதித்த கரிகாலன் போர் புரிந்து கொன்றதால் அதற்கு பழி வாங்குவதற்காக பாண்டியர்கள் சூழ்ச்சியை செய்கின்றனர். அந்த சூழ்ச்சியால் சோழ தேசத்திற்கு என்ன நடக்க போகிறது என்பதுதான் படத்தின் கதையாக உள்ளது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்