TV Shows
ஆம்பளைங்க எல்லாம் மோசமானவங்க – ட்ரெண்ட் ஆகும் சன் டிவி சீரியல்
பொதுவாகவே சன் டிவி சீரியல்கள் மக்களிடையே பிரபலமாக உள்ளன. இதனால் சன் டிவி நிறுவனமும் மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய புது புது சீரியல்களை வெளியிட்டு வருகிறது.
அப்படி தற்சமயம் புதிதாக வெளியாகி ஓடி கொண்டிருக்கும் சீரியல்தான் எதிர்நீச்சல்.

பொதுவாக சீரியல் என்றாலே ஒரு பெண்ணுக்கு குடும்ப ரீதியாக உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள், அதை சரி செய்ய அந்த பெண்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என கதை செல்லும்.
ஆனால் இந்த எதிர்நீச்சல் சீரியலில் வாழ்க்கையில் வேலைக்கு போய் சொந்த காலில் நிற்கவேண்டும் என நினைக்கும் பெண்.
ஆனால் அவள் மாட்டிக்கொண்டதோ பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என கூறும் ஒரு குடும்பத்தில், இவ்வாறாக கதை செல்கிறது.
இதன் நேற்றைய எபிசோடில் அந்த வீட்டு பெண்கள் ஆண்கள் குறித்து பேசி கொள்வதாக ஒரு காட்சி வரும். அப்போது கதாநாயகி கூறும்போது தனது அப்பா ஆணாதிக்கவாதி இல்லை என்றும் தனது அம்மாவிற்கு மரியாதை எடுப்பவர் எனவும் கூறுவார்.

அதற்கு மற்றொரு பெண் “உங்க வீட்டில் முக்கியமான முடிவுகளை எல்லாம் அப்பா எடுப்பாரா? அம்மா எடுப்பாரா?” எனக் கேட்பார்.
அதற்கு கதாநாயகி “அப்பாதான் எடுப்பார். அவருக்குதான் அதிகமா தெரியும்” என கூறுவார். உடனே அந்த பெண் “அப்படி உன்ன நம்ப வச்சி இருக்காங்க. இங்க எல்லா ஆண்களும் ஒண்ணுதான்” என கூறுவார்.
எனவே பொதுவாக ஆண்களும் அனைவரும் மோசம் என கூறிவிட முடியாது என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். இதனால் இந்த நாடகம் சர்ச்சையாகி வருகிறது.
