Connect with us

ஒரே வீட்டில் விஜய்யும் த்ரிஷாவும்… புரிஞ்சு போச்சு ப்ரோ?..

vijay trisha

News

ஒரே வீட்டில் விஜய்யும் த்ரிஷாவும்… புரிஞ்சு போச்சு ப்ரோ?..

Social Media Bar

குருவி திரைப்படம் வெளியான காலம் முதலே  நடிகர் விஜய்க்கும் நடிகை திரிஷாவிற்க்கும் காதல் இருந்து வருவதாக பேச்சு இருந்து கொண்டுதான் இருந்தன.

அதற்குப் பிறகும் அவர்கள் நிறைய திரைப்படங்கள் ஒன்றாக சேர்ந்து நடித்து வந்து கொண்டிருந்தனர். சொல்ல போனால் தமிழ் சினிமாவில் விஜய் வேறு எந்த நடிகையுடனும் இவ்வளவு திரைப்படங்களில் சேர்ந்து நடித்தது கிடையாது.

த்ரிஷா விஜய் காதல்:

அந்த வகையில் கண்டிப்பாக திரிஷாவுடன் அவருக்கு ஒரு கெமிஸ்ட்ரி இருக்கிறது என்று பலரும் நினைத்து வந்தனர். பிறகு காலப்போக்கில் அந்த பேச்சு இல்லாமல் போனது. ஆனால் லியோ திரைப்படத்தில் மீண்டும் திரிஷா கதாநாயகியாக நடித்த பிறகு இந்த பேச்சு மீண்டும் ஆரம்பமானது.

அதற்கேற்றார் போல லியோ திரைப்படத்தில் மிக நெருக்கமான காட்சிகளும் முத்த காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. ரசிகர்களுக்கு சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக இது அமைந்தது.

அப்போதிலிருந்தே விஜய்யும் த்ரிஷாவும் மீண்டும் காதலித்து வருகின்றனர் என்றும் அவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் சென்றனர் என்றும் சில வதந்திகள் உலா வந்து கொண்டிருந்தன.

மீண்டும் வெடித்த சர்ச்சை:

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய்யுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை திரிஷா வெளியிட்டிருந்தார். இது எங்கு எடுத்த புகைப்படம் என்று பார்க்கும் பொழுது அது சென்னையில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்படுகிறது.

Vijay_Trisha
Vijay_Trisha

விஜய் சமீபத்தில்தான் புதிதாக ஒரு அப்பார்ட்மெண்ட் ஒன்றை சென்னையில் வாங்கினார். அதே இடத்தில் நடிகை திரிஷாவும் அவருக்கு ஒரு வீட்டை வாங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரே அபார்ட்மெண்டில் தான் விஜய்யும் திரிஷாவும் இருந்து வருகின்றனர்.

அதனால் அவர்கள் நெருக்கமானதாக இருப்பதற்கான சூழல்கள் அதிகமாக இருப்பதால் இன்னும் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் நீடித்து வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று பேசத் தொடங்கி இருக்கின்றனர் நெட்டிசன்கள். விஜயின் பிறந்த நாளுக்காக வாழ்த்து சொல்ல போய் தற்சமயம் சர்ச்சைக்குள் சிக்கி இருக்கிறார் நடிகை திரிஷா.

To Top