Hollywood Cinema news
வானத்தில் பறக்கும் பைக்.. ஏ.ஐயால் வந்த வினை.. தமிழில் வரும் Tron: Ares திரைப்படம்
இயக்குனர் Joseph Kosinski இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ட்ரான் லீகசி (Tron Legacy) இந்த படத்தின் கதைப்படி ஒரு ஏ.ஐ உலகத்தை உருவாக்குகிறார் விஞ்ஞானி ஒருவர். அவரது மகனான சாம் அதிக ஆய்வுகளை செய்து அந்த உலகிற்குள் செல்கிறான்.
அந்த உலகில் அவன் காணும் அதிசயங்களை வைத்து அந்த படம் செல்லும். இந்த நிலையில் அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகமான ட்ரான் ஏரிஸ் Tron Ares திரைப்படத்தின் ட்ரைலர் அடுத்து வெளியாக இருக்கிறது. இந்த ட்ரைலரின்படி கதை அம்சம் முழுமையாக இதில் மாறுப்பட்டுள்ளது.
இயக்குனர் Joachim Rønning இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் Jared Leto தான் ஏரிஸ் என்கிற கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஐ உலகில் வாழ்ந்து வரும் ஒருவனாக ஏரிஸ் என்பவன் இருந்து வருகிறான். அவனுக்கு கொடுக்கப்பட்ட ஒரு பணியின் காரணமாக அவன் நிஜ மனிதர்களின் உலகிற்கு வர வேண்டி இருக்கிறது.
இந்த நிலையில் மனித குலம் முதன் முதலாக ஏ.ஐ மனிதர்களை பார்க்கிறது. அதிலிருந்து இவர்கள் இருவருக்கும் இடையேயான போராட்டம் எப்படி செல்கிறது என்பதாக இந்த படத்தின் கதை செல்கிறது. தற்சமயம் வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தின் ட்ரைலர் தமிழிலும் கூட வெளியாகியுள்ளது.
இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்கிற்கு வர இருக்கிறது.
