Connect with us

மோடியை பார்க்க போனதுக்கு தீவிரவாதின்னு பட்டம் குத்திட்டாங்க!.. ஒளிப்பதிவாளருக்கு நடந்த கொடுமை!..

UK senthilkumar narendra modi

Cinema History

மோடியை பார்க்க போனதுக்கு தீவிரவாதின்னு பட்டம் குத்திட்டாங்க!.. ஒளிப்பதிவாளருக்கு நடந்த கொடுமை!..

Social Media Bar

பொதுவாக பொதுமக்கள் பிரபலங்களை போய் காண்பது அரிதான விஷயமாக இருக்கும். பல கஷ்டங்களை அனுபவித்து அவர்கள் சென்று பார்ப்பது வழக்கமாக இருக்கும். ஆனால் ஒரு பிரபலத்தை பார்த்ததால் தனக்கு பிரச்சனை ஏற்பட்டதாக பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் தனது பேட்டியில் கூறியுள்ளார். யூகே செந்தில் குமார் தமிழில் பல திரைப்படங்களுக்கு ஒளி பதிவாளராக இருந்துள்ளார்.

மிகவும் பிரபலமான நபரும் கூட இவருக்கு பிரதமர் மோடியின் மீது மிகுந்த ஆவல் உண்டு. ஒரு முறை பிரதமர் மோடியை நேரில் சந்திக்க ஆசைப்பட்ட அவர் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு நேரில் சென்று பிரதமர் மோடியையும் பார்த்துள்ளார்.

பார்த்துவிட்டு அவரிடம் நிறைய விஷயங்களை பேசி உள்ளார் பேசிவிட்டு மறுநாள் காலை அவர் திரும்ப தமிழ்நாட்டுக்கு கிளம்பயிருந்தார். எனவே விமான நிலையத்திற்கு சென்று விமானத்தில் ஏறியுள்ளார் யு கே செந்தில் குமார்.

அவர் ஏறி 10 நிமிடம் கழித்து ராணுவ பாதுகாவலர்கள் அந்த விமான நிலையத்திற்கு வந்து யூகே செந்தில் குமாரை சட்டையை பிடித்து வெளியில் இழுத்து சென்றுள்ளனர். ஏதோ தீவிரவாதியைதான் அவர்கள் பிடிக்கிறார்கள் என்று நினைத்து மக்களும் கைதட்டி உள்ளனர்.

அவரை அழைத்துக்கொண்டு போலீஸ் வண்டியில் போட்டு அவரை மோடியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வந்ததும் அவரைப் பார்த்து மோடி எங்கே சென்று இருந்தீர்கள் என்று சாதாரணமாக கேட்டுள்ளார்.

அப்போது யுகே செந்தில்குமார் நடந்த விஷயங்களை கூறியுள்ளார். இதனை கேட்டதும் மோடிக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவர் சாதாரணமாக அவரது செக்யூரிட்டிகளை அழைத்து யூகே செந்தில் குமார் எங்கே என்று மட்டும் தான் கேட்டிருந்தார். அவர் விமான நிலையத்திற்கு சென்றதோ, ஊருக்கு செல்ல இருந்த விஷயமோ மோடிக்கு தெரியவில்லை இது தெரியாமல் அந்த பாதுகாவலர்கள் விமான நிலையத்திற்கு சென்று இவரை அழைத்து வந்துள்ளனர். இந்த விஷயத்தை செந்தில்குமார் அந்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

To Top