Connect with us

வேணாம்னா போ!.. பாட்டை மாத்தி கொடுத்து கலாய்த்துவிட்ட வாலி!.. எம்.ஜி.ஆர் படத்தில் நடந்த சம்பவம்!.

Tamil Cinema News

வேணாம்னா போ!.. பாட்டை மாத்தி கொடுத்து கலாய்த்துவிட்ட வாலி!.. எம்.ஜி.ஆர் படத்தில் நடந்த சம்பவம்!.

Social Media Bar

Tamil Poet Vaali : கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பரவலாக பெரும் கவிஞராக அறியப்படுபவர் வாலி. வாலி எழுதிய பாடல் வரிகளுக்கு எல்லா காலங்களிலும் வெற்றி இருந்தது. வாலி எம்.ஜி.ஆர் நடித்த கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டத்தில் துவங்கி சித்தார்த் நடித்து வெளியான காவிய தலைவன் வரை பாடல்களுக்கு வரிகளை எழுதியுள்ளார்.

மாறி வரும் தலைமுறைகளுக்கு ஏற்றாற் போல சினிமாவும் மாற்றம் கண்டது. அப்போது அதற்கு தகுந்தாற் போல தனது பாடல் வரிகளிலும் மாற்றத்தை செய்தார் வாலி. அதனால்தான் வாலியால் இவ்வளவு காலங்கள் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடிந்தது.

இயக்குனர் பி.ஆர் பந்தலு அப்போது மிகவும் பிரபலமான ஒரு இயக்குனராவார். அவரது இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பில் பறக்கும் பாவை என்கிற படம் தயாராகி வந்தது. அந்த படத்திற்கு பாடல் வரிகளை எழுத வாலியை அழைத்திருந்தனர். பொதுவாகவே எம்.ஜி.ஆர் படங்களுக்கு வாலிதான் பாடல் வரிகளை எழுதுவார்.

இந்த நிலையில் அந்த படத்தில் புத்தம் புதிய புத்தகமே என்கிற பாடலுக்கான வரிகளை எழுதினார் வாலி. ஆனால் இயக்குனர் பி.ஆர் பந்தலுவிற்கு அந்த பாடல் பிடிக்கவில்லை. பாடம் வரிகள் மிகவும் பெரிதாக உள்ளன என கூறிவிட்டார்.

இந்த நிலையில் அன்று மதியமே எம்.ஜி.ஆர் நடிக்கும் மற்றொரு திரைப்படமான அரசக்கட்டளை திரைப்படத்தில் ஒரு டூயட் பாடல் வேண்டும் என கேட்டுள்ளனர். உடனே வாலி அந்த பாடல் வரிகளை அப்படியே அரச கட்டளைக்கு கொடுத்துவிட்டார்.

படம் வெளியான பிறகு அரசக்கட்டளை திரைப்படத்தில் அந்த பாடல் பெரும் ஹிட் கொடுத்தது.

To Top