Cinema History
அடப்பாவிகளா!.. விஷ பாம்பா… வடிவேலு படத்தில் நடந்த சம்பவம்!..
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகளை தாண்டிய பின்னும் தமிழ் சினிமாவில் வடிவேலுவிற்கு இருக்கும் வரவேற்பு குறையவில்லை.
அதே போல அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் பிடித்தமான நகைச்சுவை கலைஞராக இவர் இருக்கிறார். ஒருமுறை வடிவேலு அவர் நடித்த திரைப்படத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை தனது பேட்டியில் பகிர்ந்திருந்தார்.
வடிவேலு ஒரு படத்தில் காமெடியனாக நடித்தப்போது அந்த படத்தில் கதாநாயகனுக்கு பாம்புடன் 15 நாள் படப்பிடிப்பு இருந்தது. அங்கிருந்த பாம்பாட்டியை அழைத்த ஹீரோ, இந்த பாம்பு பல்லு பிடிங்கின பாம்பா என கேட்டுள்ளார்.
அதற்கு பாம்பாட்டி அதெல்லாம் புடிங்கியாச்சி சார் பயப்படாதீங்க என கூறியுள்ளார். அப்படினா அதை கடிக்கவிட்டு காட்டு என கூறியுள்ளார் ஹீரோ. சரி என பாம்பை வெளியில் எடுத்து பாம்பாட்டி அவரையே கடிக்க விட்டுள்ளார். பாம்பு கடித்ததும் பாம்பாட்டி அதிர்ச்சியடைந்துள்ளார்.
என்னையா என ஹீரோ கேட்க, சார் பாம்பு பெட்டி மாறி போயிடுச்சு சார் என கூறியவாறே மயங்கி விழுந்துள்ளார் பாம்பாட்டி. அந்த நிகழ்வை வடிவேலு தனது பேட்டியில் பகிர்ந்திருந்தார்.