Cinema History
உறவினர் தவறியதால் நொடித்துப்போன கண்ணதாசன்!.. எதிரியாக இருந்தாலும் வாலி செய்த உதவி!..
Kannadasan and Vaali : சிவாஜி, எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெறும் கவிஞராக அறியப்பட்டவர் கவிஞர் கண்ணதாசன். அவரது பாடல்களுக்கு அப்போது எக்கச்சக்கமான வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் அப்போது பெரும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கூட கண்ணதாசனின் வீட்டு வாசலிலேயே அவருக்காக காத்திருந்தனர்.
ஒரு பாடலைக் கேட்டு அடுத்த பத்தாவது நிமிடத்தில் அதற்கான பாடல் வரிகளை எழுதி தந்து விடுவார் கண்ணதாசன். அதேபோல ஒரே பாடலுக்கு பல பாடல் வரிகளையும் அவர் எழுதி கொடுத்திருக்கிறார். அந்த அளவிற்கு சிறப்பான பாடல் ஆசிரியர் என்றாலும் வேலையை பொருத்தவரை சரியான நேரத்திற்கு பாடல் வரிகள் எழுத வரமாட்டார். சில நேரங்களில் மது அருந்திவிட்டு கவிதை எழுத வருவார்.

இப்படியான பிரச்சனைகள் எல்லாம் கண்ணதாசனிடம் உண்டு கண்ணதாசன் சினிமாவில் பிரபலமாக இருந்த சமகாலத்தில் தமிழ் சினிமாவிற்கு புது பாடல் ஆசிரியராக வந்தவர்தான் வாலி. கண்ணதாசனுக்கு இருக்கும் அதே அளவிலான கவிதை எழுதும் திறன் வாலிக்கும் இருந்தது.
ஆனால் புதிதாக வந்த வாலியை கண்ணதாசனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிறைய இடங்களில் அதனால் வாலியை தாக்கி பேசினார் கண்ணதாசன். தன்னுடன் வாலியை சமமாக வைத்து பேச வேண்டாம் என்று பலரிடமும் கடிந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் சில நாட்களுக்கு பிறகு வாலியின் திறமை என்னவென்பது கண்ணதாசனுக்கே தெரிய துவங்கியது. இந்த நிலையில் ஒருமுறை கண்ணதாசனின் உறவினர் ஒருவர் அகால மரணம் அடைந்திருந்தார். அதற்கு அவசரமாக கண்ணதாசன் போக வேண்டி இருந்தது.

மேலும் அப்பொழுது துக்கத்தில் இருந்ததால் அவர் பாடல் வரிகளை எழுதும் நிலையில் இல்லை. இந்த நிலையில் சிவாஜிகணேசன் நடித்த நெஞ்சிருக்கும் வரை என்கிற திரைப்படத்திற்கு அன்று பாடல் வரிகள் எழுதி தந்தாக வேண்டிய சூழ்நிலை இருந்தது.
ஏனெனில் மறுநாள் அந்த பாடலுக்கான படப்பிடிப்பு நடக்க இருந்தது. இந்த நிலையில் கண்ணதாசன் வேறு வழி இன்றி வாலியிடம் உதவியை நாடினார் தன்னை பலமுறை கண்ணதாசன் தாக்கி பேசியிருந்த பொழுதும் அதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாத வாலி உடனே அந்தப் படத்தில் பாடலுக்கான காட்சியை கேட்டு நெஞ்சிருக்கும் எங்களுக்கு என்கிற பாடலை எழுதி கொடுத்தார். அந்த பாடல் நல்ல வெற்றியும் கண்டது இப்படி சினிமாவில் விட்டுக்கொடுத்து போகும் தன்மைதான் வாலியை பெரிய கவிஞர் ஆக்கியது.
