Connect with us

காசு  போட்டு ஜெயிச்சுருக்காங்க!.. பணம் கொடுத்ததை நானே பார்த்தேன்.. அர்ச்சனா வெற்றியால் விரக்தியடைந்த வனிதா!..

archana vanitha

Bigg Boss Tamil

காசு  போட்டு ஜெயிச்சுருக்காங்க!.. பணம் கொடுத்ததை நானே பார்த்தேன்.. அர்ச்சனா வெற்றியால் விரக்தியடைந்த வனிதா!..

Social Media Bar

Biggboss Tamil : இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பலரும் கலந்து கொள்ளும் பொழுது அதில் பெரும்பாலான வரவேற்பு அதிகமாக இருந்தது வனிதாவின் மகள் ஜோவிகாவிற்குதான்.

ஆனாலும் கூட ஜோவிகா சில நாட்களிலேயே எலிமினேட் ஆகிவிட்டார். அதற்கு அவர் ஒழுங்காக விளையாடுவில்லை என்பதே காரணம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. இருந்தாலும் கூட தினசரி பிக் பாஸ் குறித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார் ஜோவிகாவின் தாய் வனிதா.

இதன் மூலம் வனிதாவிற்கு நல்ல பப்ளிசிட்டி கிடைத்தது என்று கூறலாம் இந்த நிலையில் தற்சமயம் அர்ச்சனா வெற்றி அடைந்திருப்பது நேர்மையான வழியில் கிடையாது என்பது வனிதாவின் வாதமாக இருக்கிறது. நேற்று பிக் பாஸில் யார் வெற்றியாளர் என்பது குறித்து வீடியோ வருவதற்கு முன்பே வனிதா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது ஓட்டுக்களை காசு கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். அதற்காக அக்ரீமெண்ட் போட்டு பணம் கொடுத்ததை நானே எனது நெருங்கிய நண்பர்கள் மூலம் அறிந்தேன். அதனால் என்னை பொறுத்தவரை அர்ச்சனா ஜெயிப்பதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது.

அப்படி செய்கிறார் என்றால் அது மக்கள் போடும் ஓட்டுகளால் கிடையாது இந்த முறை அதிகமாக பிக்பாஸில் பணம் புழங்கியிருக்கிறது என்றெல்லாம் கூறி வருகிறார் வனிதா. இதற்கு பதில் அளிக்கும் நெட்டிசன்கள் அவ்வளவு பணம் கொடுக்கும் அளவிற்கு வசதியாக உள்ளவர்கள் எதற்காக வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள். மேலும் அர்ச்சனாவிற்கு அப்படியான பின்புலம் இருப்பதாகவும் தெரியவில்லையே என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

To Top