வரும் பொங்கல் நாளை மேலும் சிறப்பானதாக மாற்றுவதற்காக வரவிருக்கும் இரு திரைப்படங்கள்தான் வாரிசு மற்றும் துணிவு.

வெகு நாட்களுக்கு பிறகு அஜித், விஜய் இருவரும் திரையரங்கில் போட்டி போட போகும் திரைப்படமாக இது இருக்கும். இதையடுத்து ஜனவரி 12 அன்று துணிவும் 11 அன்று வாரிசும் வெளியாகும் என தகவல்கள் வந்தன.
இந்நிலையில் படத்தின் திரையரங்கு உரிமைகள் விற்கப்பட்டன. துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. வாரிசு படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் வாங்கியுள்ளது.
ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு திரையரங்குகளிடையே சற்று செல்வாக்கு அதிகம் என கூறலாம். எப்படியும் ரெட் ஜெயண்ட் அதிகமான திரையரங்குகளை பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே துணிவு திரைப்படத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே வாரிசு படத்தை வெளியிடலாம் என வாரிசு படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாரிசு திரைப்படம் என்று வெளியாகிறதோ அன்றுதான் துணிவும் வெளியாக வேண்டும். என முடிவெடுத்துள்ளதாம் ரெட் ஜெயண்ட் மூவிஸ். இதனால் இரு திரைப்படங்களுக்குமான போட்டியானது இன்னும் பெரிதாகி கொண்டே செல்கிறது.









