News
பழக்கத்துக்காக சம்பளத்தை குறைச்சிக்கிறேன்! – தயாரிப்பாளருக்கு உதவிய விஜய்
தற்சமயம் விஜய் நடித்து ட்ரெண்டிங்கில் இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படத்திற்கு ரசிக வட்டாரத்தில் அதிக வரவேற்பு இருந்து வந்துள்ளது. இதற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜூன் இயக்கத்தில் அடுத்த படம் உருவாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது வருகிற டிசம்பரில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் இயக்கும் இந்த படத்தை செவன் ஸ்கீரின் லலித் தயாரிக்கிறார்.
ஏற்கனவே வாரிசு படத்திற்கு சம்பளமாக 130 கோடி ரூபாய் வாங்கினாராம் விஜய். அதே போல லோகேஷ் கனகராஜ்க்கும் இந்த படத்திற்கு 25 கோடி சம்பளமாக தரப்பட இருந்ததாம்.
மாஸ்டர் படம் கொரோனா காரணமாக ஒரு வருடம் கழித்து வெளியானது. இதனால் தயாரிப்பாளர் லலித்திற்கு தேவையில்லாமல் வட்டி கொடுக்கும் நிலை ஏற்பட்டது. அதை கணக்கில் கொண்டு விஜய்யும், இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் தங்களது சம்பளத்தில் 5 கோடியை குறைத்துக்கொண்டனராம்.
இருவருமே பிரபலமானவர்கள் என்றாலும் கூட தயாரிப்பாளரின் நஷ்டத்தை கணக்கில் கொண்டு தங்களது சம்பளத்தை குறைத்துள்ளனர்.
