News
100 நாளை கடந்து ஹிட் அடித்த விக்ரம் – மாபெரும் விழா எடுக்க திட்டம்
நடிகர் கமல்ஹாசன் சினிமா வாழ்க்கையில் பல முக்கியமான திரைப்படங்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் விக்ரம் திரைப்படமும் கண்டிப்பாக இடம்பெறும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு ப்ளாக் பஷ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் விக்ரம்.

100 நாட்களை கடந்து திரையில் ஓடிய விக்ரம் திரைப்படம் 430 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்துள்ளது.
இந்த நிலையில் திரைப்படம் 100 நாளை தாண்டி ஓடியிருப்பதை முன்னிட்டு அதை கொண்டாடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருகிற நவம்பர் 7 ஆம் தேதி கமலுக்கு பிறந்த நாள் வருகிறது. எனவே அன்றைய தினத்திலேயே 100 நாள் ஓடியதற்கான கொண்டாட்டத்தை வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தில் பணிப்புரிந்த பலரும் இதில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
