துணிவுக்கு பிறகுதான் வாரிசா? – தளபதி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர்?

வாரிசு மற்றும் துணிவு இரு படங்களுமே வருகிற பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கின்றன. வெகு நாட்களுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் இருவரும் போட்டி போட்டு வெளியிடும் படங்களாக இவை உள்ளன.

Social Media Bar

வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். இவர் ஏற்கனவே தமிழில் தோழா என்னும் படத்தை இயக்கியுள்ளார். அதே போல துணிவு படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கியுள்ளார். இந்த நிலையில் தல ரசிகர்களுக்கும், தளபதி ரசிகர்களுக்கும் கூட கடுமையான போட்டி நிலவி வருகிறது.

தற்சமயம் இரண்டு படங்களுமே வருகிற ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வந்திருந்தன. ஆனால் இதுக்குறித்து நடிகர் மகத் கூறும்போது துணிவு வெளியாகி நான்கு நாட்கள் கழித்துதான் வாரிசு வெளியாவதாக கூறினார்.

ஆனால் திரை வட்டாரத்தில் கூறும்போது அப்படியிருக்க வாய்ப்பில்லை. பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கும் இரு படங்கள் அதிகப்பட்சம் ஒரு நாள் வித்தியாசத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.