வாரிசு படத்தின் புதிய சாதனை! – உலக அளவில் முதல் இடம்

தளபதி நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வரவிருக்கும் திரைப்படம் வாரிசு. இதற்கு போட்டியாக தல நடித்து வெளிவர இருக்கும் படம் துணிவு.

Social Media Bar

இரண்டு படங்களுமே சரியாக போட்டி போட்டுக்கொண்டுள்ளன. வரிசையாக இரண்டு படங்களும் படத்தின் அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன.

வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரைலரும், ஜனவரி 1 அன்று வாரிசு படத்தின் ட்ரைலரும் வெளிவர இருக்கின்றன.

வாரிசு படத்தில் வரிசையாக சிங்கிள் பாடல்கள் வெளியானபோது மூன்றாவது சிங்கிளாக வெளியான பாடல் சோல் ஆஃப் வாரிசு. டாப் பாடல்களின் லிஸ்ட் விடும் பில்போர்டு தளம் தற்சமயம் டாப் 10 பாடல்கள் வரிசையில் சோல் ஆஃப் வாரிசையும் இணைத்துள்ளது.

அதுவும் முதல் இடத்தை பிடித்துள்ளது சோல் ஆஃப் வாரிசு. அந்த அளவிற்கு அந்த பாடல் தமிழ் மக்களிடையே ட்ரெண்ட் ஆகி உள்ளது. உலக அளவில் தமிழ் பாடல் முதல் இடத்தை பிடித்திருப்பது என்பதே சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது.