News
வாரிசு பொங்கலுக்கு வர்றதில் பிரச்சனை! – புதிய அப்டேட்!
தமிழ் ரசிகர்கள் பலரும் ஆவலோடு காத்திருக்கும் இரண்டு திரைப்படங்கள் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றன. அவை அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு.

வாரிசு படம் வருகிற ஜனவரி 12 அன்று வெளியாக இருப்பதாகவும், துணிவு அதற்கு ஒரு நாள் முன்னதாகவே வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் வாரிசு திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
படத்திற்கு இன்னும் சென்சார் வாங்கவில்லை, எனவே சென்சார் வாங்கிய பின்னரே படத்தின் வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. ஒருவேளை சென்சார் வாங்குவதில் தாமதமானால் படம் வெளியாவதிலும் கூட தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
ஆனால் சினி வட்டாரத்தில் இதற்கு வெறோரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது அஜித்தின் துணிவிற்கு ஒரு நாள் முன்னதாகவே வாரிசு படத்தை வெளியிடலாம் என திட்டமிடுகிறார்களாம். எனவே துணிவு அதிகாரப்பூர்வமாக தேதியை அறிவித்தப்பின்னர் அதற்கு முதல் நாளை நாம் அறிவிக்கலாம் என வாரிசு குழு யோசித்துள்ளதாக கூறப்படுகிறது.
எப்படி இருந்தாலும் இரண்டு படங்களும் முடிந்தவரை பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
