தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் கொஞ்சம் வரவேற்பு பெற்ற நடிகராக இருப்பவர் நடிகர் விதார்த். இவர் மைனா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
அதன் மூலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றார். ஆனால் அதற்குப் பிறகு தொடர்ந்து அவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து தமிழில் வேறு வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் விதார்த்.
விதார்த்துக்கு நடந்த சம்பவம்:
விதார்த்தும் ஓரளவு நடிக்கும் திறன் கொண்டவர்தான் என்றாலும் கூட கதை தேர்ந்தெடுப்பதில் அவர் பெரிதாக கவனம் செலுத்தாத காரணத்தினால் அவருக்கு நல்ல திரைக்கதைகள் அமையாமல் போனது. இருந்தாலும் மக்கள் மத்தியில் தெரியும் ஒரு நடிகராக இவர் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது ஒரு நடிகையுடன் அவருக்கு நடந்த அனுபவத்தை கூறியிருக்கிறார். இதுக்குறித்து அவர் கூறும் பொழுது ஒரு பிரபல நடிகை என்னிடம் வந்து உங்களது திரைப்படங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன்.
நன்றாக நடித்து இருப்பீர்கள் என்று என்னை குறித்து நிறைய புகழ்ந்து வந்தார். ஆனால் அவர்கள் பிரபலமான நடிகை என்பதே எனக்கு தெரியாது நான் அவரிடம் சென்று தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் பெயர் என்ன என்று கேட்டேன் அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டார்.
ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை அந்த நடிகை யார் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறி இருக்கிறார் விதார்த்.
 
			 
			







