Tamil Cinema News
விக்னேஷ் சிவன் இயக்கி பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.கே படத்தின் கதை லீக்.. பாலிவுட்டில் ஏற்கனவே வந்த கதை.!
நடிகர் அஜித்துக்கு கதை சொல்லி விக்னேஷ் சிவனுக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் படம் இயக்குவதற்கு அவர் மனைவி நயன்தாராவே உதவி செய்து வந்தார்.
அந்த வகையில்தான் தற்சமயம் நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய திரைப்படம் எல்.ஐ.கே. இந்த திரைப்படம் ஒரு காதல் கதையாகும். பெரும்பாலும் காதல் திரைப்படங்கள் விக்னேஷ் சிவனுக்கு நல்லாவே ஒர்க் அவுட் ஆகிவிடும்.
இதற்கு முன்பு அவர் இயக்கிய படங்களில் நானும் ரவுடிதான் திரைப்படம்தான் அதிகமாக பேசப்பட்டது. அந்த திரைப்படம் ஒரு காதல் திரைப்படமாகும். இந்த நிலையில் எல்.ஐ.கே திரைப்படம் குறித்து விக்னேஷ் சிவன் கூறும்போது அந்த படத்தின் கதை என்னவென்று கூறி இருக்கிறார்.
விக்னேஷ் சிவன் சொன்ன விஷயம்:
அதில் அவர் கூறும்பொழுது எல்.ஐ.கே திரைப்படத்தை முன்பே நான் எடுப்பதற்கு திட்டமிட்டிருந்தேன். அப்பொழுது சிவகார்த்திகேயனிடம் பேசி இருந்தோம். ஆனால் அந்த திரைப்படத்தை அப்பொழுது இயக்க முடியாமல் போய்விட்டது.
ஏனெனில் தயாரிப்பாளர்கள் அந்த படத்தின் கதையை மாற்ற சொன்னார்கள். ஏற்கனவே நான் நிறைய தோல்வியை கண்டு விட்டதால் இந்த படத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அதனால் இயக்காமல் இருந்தேன்.
படத்தின் கதை எதிர்காலத்தில் நடக்கும் காதல் கதை ஆகும். அதை நிகழ்காலத்தில் நடப்பது போல் அவர்கள் மாற்றி அமைக்க சொன்னார்கள் பாகுபலி படத்தை இப்பொழுது உள்ள காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி எடுக்க முடியுமா? அந்த மாதிரிதான் அந்த கதையும், அதனால் அப்போது நான் எடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
விக்னேஷ் சிவன் இதே மாதிரியான கதை அமைப்பில் லவ் ஸ்டோரி 2050 என்கிற திரைப்படம் பாலிவுட்டில் வெளியாகியிருக்கிறது. அந்த கதையை தழுவலாக கொண்டுதான் இந்த படம் இருக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்