ஏர்போர்ட்டில் அடி வாங்கிய விஜய் பௌன்சர்.. ரசிகர்களால் வந்த பிரச்சனை..!

நடிகர் விஜய் முழு மூச்சாக தற்சமயம் அரசியலில் கால் பதித்து இயங்கி வருகிறார். இதனால் சினிமா மீது ஆர்வம் காட்ட முடியாத அளவிற்கு ஏற்கனவே விஜய் பிஸி ஆகிவிட்டார். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது.

அதற்குள் விஜய் தனது இறுதி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடிக்க வேண்டும். இந்த நிலையில் ஜனநாயகன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து முடிந்தது.

படப்பிடிப்பு நடந்து முடிந்த காரணத்தால் விஜய் சென்னைக்கு திரும்புவதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். இந்த நேரத்தில் அவரை சுற்றி ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துக்கொண்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் விஜய்யின் பௌன்சருக்கும் ரசிகர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் விஜய் பௌன்சரை தாக்கியுள்ளனர். இதில் அவரது உடை கிழிந்துள்ளது. இந்த வீடியோ இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version