தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் விஜய் ஆண்டனி முக்கியமானவர். அவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த திரைப்படம் நான். இந்த திரைப்படத்தில் இருந்து இப்போது வந்துள்ள திரைப்படங்கள் வரையிலும் அனைத்து திரைப்படங்களிலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் நடிகர் விஜய் ஆண்டனி.

தற்சமயம் இவர் பிச்சைக்காரன் 2 என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து திரையுலகில் பெரும் உயரங்களை தொட்டவர். சாதாரண சவுண்ட் இன்ஜினியராக வந்து இசையமைப்பாளராக மாறி பிறகு கதாநாயகனாக நடித்து தற்சமயம் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் விஜய் ஆண்டனி.
ஒரு காலத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவிற்குள்ளேயே விஜய் ஆண்டனிக்கு அனுமதி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஏனெனில் பொதுவாக ஏவிஎம் ஸ்டுடியோவிற்குள் யார் சென்றாலும் அவர்கள் வாய்ப்பிற்காக வருகிறார்கள் என்று எண்ணி பிரபலங்களைத் தவிர யாரையும் உள்ளே விடுவதே இல்லை.
தற்சமயம் அப்படிப்பட்ட ஏவிஎம் ஸ்டுடியோவில் தனக்கென தனி இடத்தை வாங்கி வைத்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. ஒரு காலத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவிற்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட விஜய் ஆண்டனி தற்சமயம் ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒரு பகுதியை வாங்கி வைத்திருப்பது பெரும் சாதனையாகும் என அவரை சுற்றி உள்ளவர்கள் பாராட்டுகின்றனர்.
இந்த வருட இறுதிக்குள் ஆண்டனி நடித்து வரும் பிச்சைக்காரன் 2 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.








